விஷாலிற்கும் லட்சுமி மேனனுக்கும் திருமணமா? உறுதிபடுத்திய விஷால்
தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவராக இருப்பவர் தான் விஷால். சமீபத்தில் இவர் நடிகை லட்சமிமேனனை திருமணம் செய்து கொள்ள போவதாக சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியானது.
இந்நிலையில் இது குறித்து பேசிய விஷால், என்னை குறித்து வரும் போலியான செய்திகளுக்கு நான் எப்போதும் விளக்கம் கொடுப்பது இல்லை. அது தேவை இல்லாத ஒன்று என நம்புகிறேன்.
சமீபத்தில் நான் லட்சமிமேனனை திருமணம் செய்துகொள்ள போவதாக வந்த செய்தி முற்றிலும் பொய்யானது. உண்மை இல்லை. நான் இந்த வதந்திக்கு பதில் அளிக்க காரனம் ஒரு நடிகையை ஈடுபடுத்தி இருப்பதற்காக தான்.
நீங்கள் ஒரு பெண்ணின் தனிப்பட்ட வாழ்க்கை கெடுக்கிறீர்கள். நேரம் வரும் போது நானே என் திருமணம் குறித்து அதிகாரப்பூர்வமாக கூறுவேன் என்று காட்டமாக பதிலளித்திருக்கிறார் நடிகர் விஷால்.
Leave a comment