காலநிலை மாற்றத்தினால் ஏற்பட்டுள்ள ஆபத்து!
வறட்சியான காலநிலை காரணமாக எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறைந்த நீருடன் காணப்படும் ஏரிகளுக்கு மீன்பிடிப்பதற்கும், குளிப்பதற்கும் மக்கள் வருவதால் இவ்வாறு எலிக்காய்ச்சல் அதிகம் பரவும் ஆபத்து காணப்படுவதாக சுகாதார அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதேவேளை, குருநாகல் கனேவத்த மகுல்வெவ கிராமத்தைச் சேர்ந்த இருவர் எலிக்காய்ச்சலால் கடந்த 9ஆம் திகதி உயிரிழந்துள்ளனர்.
38 மற்றும் 39 வயதுடைய குறித்த நபர்களே அப்பகுதியிலுள்ள கிரிந்திவெல்மட குளத்தில் நீராடும்போது சுகவீனமடைந்ததாக தெரிவிக்ககப்படுகின்றது.
மேலும், மகுல்வெவ பிரதேசத்தைச் சேர்ந்த மேலும் 12 பேர் காய்ச்சலினால் குருநாகல் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
3 Comments