கொள்கலன் ஒன்றுடன் மோதிய ரயில் - ஸ்தம்பித்த போக்குவரத்து
இலங்கைசெய்திகள்

கொள்கலன் ஒன்றுடன் மோதிய ரயில் – ஸ்தம்பித்த போக்குவரத்து

Share

கொள்கலன் ஒன்றுடன் மோதிய ரயில் – ஸ்தம்பித்த போக்குவரத்து

வில்வத்த ரயில் கடவையில் கொள்கலன் ஒன்று ரயிலுடன் இன்று காலை மோதியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இதன் காரணமாக கிரிஉல்ல – மீரிகம வீதி போக்குவரத்து முற்றாக ஸ்தம்பிதமடைந்துள்ளது.

பொல்கஹவெலயில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த அலுவலக ரயிலுடன் இந்த கொள்கலன் மோதியுள்ளது.

ரயிலில் மோதிய கொள்கலன் பெட்டி சுமார் 100 மீற்றர் தூரம் இழுத்துச் செல்லப்பட்டு நிறுத்தப்பட்டதால் ரயில் சமிக்ஞை, மின்கம்பங்கள், ரயில் கதவுகள் என்பன பலத்த சேதம் அடைந்துள்ளதென என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த விபத்தால், ரயிலின் சக்கரங்கள் மற்றும் என்ஜின் பலத்த சேதமடைந்துள்ளன.

இதனால் பல ரயில்கள் தாமதமாக புறப்படுவதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
MediaFile 1 10
செய்திகள்அரசியல்இலங்கை

ஒன்றிணைந்த எதிர்க்கட்சி கூட்டத்தில் துப்பாக்கியுடன் காணப்பட்ட முன்னாள் எம்.பி: விசாரணைக்காகப் பறிமுதல்!

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதித லொக்குபண்டாரவிடம் (Uditha Lokubandara) இருந்த ஒரு கைத்துப்பாக்கியை நுகேகொடப் பொலிஸ்...

parliament2
செய்திகள்அரசியல்இலங்கை

அனர்த்த நிலைமை குறித்துப் பேச: பாதிக்கப்பட்ட மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஜனாதிபதி அழைப்பு!

நாட்டில் ஏற்பட்டுள்ள அனர்த்த நிலைமைகள் குறித்து விவாதிப்பதற்காக, அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து மாவட்டங்களையும் சேர்ந்த பாராளுமன்ற...

images 6 2
செய்திகள்இலங்கை

வாகன இறக்குமதி நிலையான மட்டத்தை அடைந்தது; டொலர் கையிருப்பு உயரும்: மத்திய வங்கி ஆளுநர் நம்பிக்கை!

இலங்கையில் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் வாகன இறக்குமதி குறிப்பிடத்தக்க அளவில் நிலையான மட்டத்தை அடைந்துள்ளதாக,...