காலைவாரும் ‘மொட்டு’ – ரணிலுக்குத் தலையிடி
அரசமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எடுத்து வரும் நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு வழங்குவதில்லை என்று மொட்டுக் கட்சிக்குள் அதிகமானவர்கள் முடிவிடுத்துள்ளார்கள் என்று அறியமுடிகின்றது.
பசில் ராஜபக்சவின் தலைமையில் மொட்டுக் கட்சி எம்.பிக்கள் – முக்கியஸ்தர்கள் கூடி 13ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எடுத்து வரும் நடவடிக்கைகள் பற்றி ஆராய்ந்தனர்.
அப்போது பல நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ரணிலின் இந்தச் செயற்பாட்டில் உடன்பாடில்லை என்று கூறப்பட்டுள்ளதாக உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.
13 ஆவது திருத்தச் சட்டத்தை ரணிலால் நடைமுறைப்படுத்த முடியுமா?
“13 ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் மக்கள் ஆணை ஜனாதிபதிக்கு இல்லை. கோட்டாபயவின் மிகுதிக் காலத்தை நிறைவு செய்வதற்காகவே ரணில் ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டார்.
கோட்டாபயவின் தேர்தல் வாக்குறுதியில்கூட 13ஐ நடைமுறைப்படுத்துவதாகக் கூறப்படவில்லை. அப்படி இருக்கும்போது எப்படி ரணிலால் இதை நடைமுறைப்படுத்த முடியும்?” என்று அவர்கள் அங்கு கூறியுள்ளனர்.
ஆகவே, 13ஐ நடைமுறைப்படுத்துவதில் ஜனாதிபதி எதிர்காலத்தில் சிக்கலை எதிர்நோக்குவார் என்றே தெரிகின்றது.
Leave a comment