யாழில் திருமணத்திற்கு பெண் பார்க்க சென்ற இளைஞனுக்கு நேர்ந்த கதி
இலங்கைசெய்திகள்

யாழில் திருமணத்திற்கு பெண் பார்க்க சென்ற இளைஞனுக்கு நேர்ந்த கதி

Share

யாழில் திருமணத்திற்கு பெண் பார்க்க சென்ற இளைஞனுக்கு நேர்ந்த கதி

திருமணத்திற்கு பெண் பார்க்க சென்ற இளைஞனை நூதன முறையில் ஏமாற்றி 18 இலட்ச ரூபாய் பணத்தை மோசடி செய்த குற்றச்சாட்டில் பெண்ணொருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கிளிநொச்சி பளையை சேர்ந்த இளைஞர் ஒருவர் யாழ்ப்பாணம் மானிப்பாய் பகுதியில் உள்ள பெண் ஒருவரை திருமணம் செய்து கொள்வதற்கு பெண் பார்க்க சென்றுள்ளார்.

இளைஞன் பெண் பார்த்து சென்ற சில நாட்களில், இளைஞனின் தொலைபேசிக்கு அழைப்பு ஏற்படுத்திய நபர் ஒருவர், தான் அவுஸ்ரேலியாவில் இருந்து கதைப்பதாகவும், தன்னை இப்பெண்ணின் சகோதரர் என அறிமுகப்படுத்திக்கொண்டு, தனது தங்கை வெளிநாட்டு மாப்பிள்ளையை எதிர்பார்ப்பதாகவும், அதனால் உங்களை நான் வெளிநாட்டுக்கு எடுத்து விட முயற்சிப்பதாகவும் கூறியுள்ளார்.

இதற்காக 18 இலட்ச ரூபாய் பணத்தினை இந்த கணக்கு இலக்கத்திற்கு வங்கியில் வைப்பிலிடுங்கள் என ஒரு கணக்கிலக்கத்தை வழங்கியுள்ளார். இளைஞனும் அவரின் பேச்சை நம்பி பணத்தினை வைப்பிலிட்டுள்ளார்.

சில மாதங்கள் கடந்த நிலையிலும் தனது வெளிநாட்டு அலுவல்கள் எதுவும் முன்னெடுக்கப்படாத நிலையில் சுதாகரித்துக்கொண்ட இளைஞன் , அவுஸ்ரேலிய நபருடன் தொடர்பு கொண்டுள்ளார்.

இந்நிலையில் இருவருக்குமிடையில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக சந்தேகநபர் தொடர்பை துண்டித்துள்ளார். அதன் பின்னர் அந்த தொலைபேசி இலக்கமும் செயலிழந்துள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட இளைஞன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

முறைப்பாட்டின் பிரகராம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் , இளைஞன் தனது பணத்தை வைப்பிலிட்ட கணக்கிலக்க உரிமையாளரான கிளிநொச்சியை சேர்ந்த பெண்ணை கைது செய்துள்ளனர்.

குறித்த கணக்கு இலக்கத்திற்கு பல தடவைகள் இலட்சங்களில் பணப்பரிமாற்றம் நடந்துள்ளமை தெரியவந்துள்ளது. அது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த போது இவ்வாறாக வடமராட்சி பகுதியில் உள்ள இளைஞனையும் ஏமாற்றி வருவது தெரிய வந்துள்ளது.

இதேவேளை மானிப்பாயில் இளைஞன் பெண் பார்க்க சென்ற பெண் , வேறு ஒரு நபரை திருமணம் செய்துள்ள நிலையில் அவரிடம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்த போது , பளை இளைஞன் தன்னை பெண் பார்த்து சென்ற உடனேயே இளைஞனை பிடிக்கவில்லை என கூறி விட்டதாகவும், அதன் பின்னர் தனது சகோதரன் அவரை ஏமாற்றிய விடயம் தனக்கு தெரியாது எனவும் கூறியுள்ளார்.

இந்நிலையில் சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Share

1 Comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
MediaFile
செய்திகள்அரசியல்இலங்கை

முன்னாள் அமைச்சர் சி.பி. ரத்நாயக்க இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் கைது: டிசம்பர் 16 வரை விளக்கமறியல்!

முன்னாள் அமைச்சர் சி.பி. ரத்நாயக்க இன்று (டிச 2) இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை...

1654603198 litro gas distribution
செய்திகள்இலங்கை

யாழ்ப்பாண மாவட்டத்திற்குத் தேவையான எரிவாயு சிலிண்டர்கள் கையிருப்பு: கட்டம் கட்டமாக விநியோகம்!

யாழ்ப்பாண மாவட்டத்திற்குத் தேவையான சமையல் எரிவாயு சிலிண்டர்கள் (LPG Cylinders) கொண்டுவரப்பட்டுள்ளதாகவும், விநியோக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும்...

25 692c8763b7367
செய்திகள்இலங்கை

இலங்கையில் அனர்த்த உயிரிழப்புகள் 465 ஆக அதிகரிப்பு; 366 பேர் காணாமல் போயினர் – அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தகவல்!

நாட்டின் 25 மாவட்டங்களையும் பாதித்துள்ள அனர்த்த நிலைமை காரணமாக, உயிரிழந்தோரின் எண்ணிக்கை 465 ஆக அதிகரித்துள்ளதாக...

images 1
செய்திகள்இலங்கை

ரயில் பயணிகள் அவதானம்: நவம்பர் மாதப் பருவச் சீட்டின் செல்லுபடி காலம் டிசம்பர் 7 வரை நீடிப்பு!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை மற்றும் ரயில் போக்குவரத்துப் பாதிப்புகள் காரணமாக, நவம்பர் மாதத்துக்கான ரயில்...