மட்டக்களப்பு கல்முனை வீதியில் இரு விபத்துக்கள்!!!

லொறி மோதி விபத்து! கணவன் கண்முன்னே காதல் மனைவி பரிதாப மரணம்

லொறி மோதி விபத்து! கணவன் கண்முன்னே காதல் மனைவி பரிதாப மரணம்

மட்டக்களப்பு கல்முனை வீதியில் இரு விபத்துக்கள்!!!

மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியில் இரு இடங்களில் வெவ்வேறு விபத்துக்கள் பதிவாகியுள்ளன.

காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாவற்குடாவில் இன்று (30.07.2023) மாலை விபத்தொன்று இடம்பெற்றுள்ளது.

கல்முனையிலிருந்து மாங்காய்களை ஏற்றிக்கொண்டு மினுவான்கொடை நோக்கிச் சென்ற லொறி ஒன்று சாரதியின் அதிக தூக்கம் காரணமாக மட்டக்களப்பு தொழில்நுட்ப கல்லூரிக்கு முன்னால் அமைந்துள்ள மின்கம்பமொன்றில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

திடீரென மின்கம்பத்தில் மோதியதன் காரணமாக பின்னால் வந்த மோட்டார் சைக்கிளில் வந்த இருவரும் மோட்டார் சைக்கிள் கீழே விழுந்து படுகாயம் அடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன் காரணமாக லொறி பாரிய சேதமடைந்துள்ளதுடன் பயணித்த லொறியின் நடத்துனருக்கு பாரிய காயங்கள் ஏற்பட்டு பலத்த காயங்களுடன் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியில் நாவற்குடாவில் இன்று(30.07.2023) மற்றுமொரு விபத்தில் இடம்பெற்றுள்ளது.

மட்டக்களப்பிலிருந்து களுவாஞ்சிகுடி நோக்கி மோட்டார் வண்டியில் தாயும் மகனும் பயணித்துள்ளனர்.

இந்நிலையில் இரும்பு, தகரம், உள்ளிட்ட, பொருட்களை வாங்கி வந்த நபர் ஒருவர் திடீரென துவிச்சக்கர வண்டியில் குறுக்கீடு செய்தமையால் இவ்விபத்து சம்பவித்துள்ளதாக இதனை நேரில் அவதானித்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதில் மோட்டார் வண்டி பலத்த சேதமடைந்துள்ளதுடன், இவ்விபத்திலும் மூவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இக்குறித்த விபத்துச் சம்பவங்கள் தொடர்பாக காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version