வாகன விபத்தில் சிக்கி தம்பதியினர் பலி!
இலங்கைசெய்திகள்

வாகன விபத்தில் சிக்கி தம்பதியினர் பலி!

Share

வாகன விபத்தில் சிக்கி தம்பதியினர் பலி!

திஸ்ஸமஹாராம – கதிர்காமம் பிரதான வீதி 6 இல் கனுவ பகுதியில் மோட்டார் சைக்கிளொன்றும் வானொன்றும் நேருக்கு நேர் மோதியதில் ஆசிரியை ஒருவரும் அவரது கணவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

மேலும், விபத்தில் காயமடைந்த அவர்களது 15 வயது மகன் மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், அவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

வானின் சாரதி அதிக மதுபோதையில் இருந்ததாக சந்தேகிக்கப்படுவதாகவும், அவரை வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்தவுள்ளதாக திஸ்ஸமஹாராம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கதிர்காம பூஜைக்காக கிரிந்தேயிலிருந்து கதிர்காமம் நோக்கி பயணித்த வானே இவ்வாறு விபத்திற்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஆசிரியர் சங்க கூட்டத்திற்கு சென்று கொண்டிருந்த போதே இந்த விபத்தில் சிக்கி தம்பதியினர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
download
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மன்னார் கடலில் பெரும் போதைப்பொருள் வேட்டை! – 50 கிலோ ‘ஹஷிஷ்’ பறிமுதல்; இருவர் கைது!

மன்னார் கடல் பகுதியில் கடற்படையினரால் இன்று முன்னெடுக்கப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, சுமார் 50...

1698224062 NAMAL MEDIA 6 696x487 1
செய்திகள்அரசியல்இலங்கை

அரகலயவின் பின்னணியில் வெளிநாட்டுச் சதி? – ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணை கோருகிறார் நாமல் ராஜபக்ஷ!

இலங்கையில் 2022-ஆம் ஆண்டு நிலவிய பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து உருவான ‘அரகலய’ (மக்களின் போராட்டம்) மற்றும்...

ms dhoni 2012 1200 1726388754
விளையாட்டுசெய்திகள்

தோனியின் பதவி விலகல் சொந்த முடிவு அல்ல? – பிசிசிஐ கொடுத்த அழுத்தம் குறித்து அம்பலமான உண்மை!

இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றிகரமான கேப்டனாகக் கருதப்படும் எம்.எஸ். தோனி, 2017-ஆம் ஆண்டு ஒருநாள் மற்றும்...

1739372035 images 6
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

இலங்கையர்களுக்கு டிஜிட்டல் வரம்: e-BMD திட்டத்தின் கீழ் ஒரே ஆண்டில் 8,027 பேர் பயன்!

இலங்கை அரசாங்கத்தின் அரச சேவைகளை டிஜிட்டல் மயமாக்கும் வேலைத்திட்டத்தின் கீழ், வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்ட...