இலங்கைசெய்திகள்

கண்டியில் இடம்பெற்ற கார் விபத்து!! ரஷ்ய இளைஞர் உட்பட இருவர் பலி!

Share

கண்டியில் இடம்பெற்ற கார் விபத்து!! ரஷ்ய இளைஞர் உட்பட இருவர் பலி!

கண்டியில் இடம்பெற்ற விபத்தொன்றில் ரஷ்ய இளைஞர் உட்பட இருவர் உயிரிழந்துள்ளனர்.

குறித்த விபத்தானது இன்று(29.07.2023) பிற்பகல் கண்டி மீமுரே வீதியில் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் உயிரிழந்த ரஷ்ய இளைஞர் 28 வயதுடையவர் எனவும், மற்றையவர் இலங்கையை சேர்ந்த 51 வயதுடைய பெண் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கண்டி – மீமுரே வீதியில் பயணித்த கார் வீதியை விட்டு விலகி பள்ளத்தில் விழுந்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் குறித்த விபத்தில் ரஷ்ய இளைஞரும் இலங்கைப் பெண்ணும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன் காரில் பயணித்த மேலும் இருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 68f34f316f8d5
செய்திகள்இலங்கை

மண்ணில் புதைக்கப்பட்ட இஷாரா செவ்வந்தியின் கைப்பேசி மீட்பு: விசாரணையில் மேலும் பலர் சிக்குவார்கள்!

‘கணேமுல்ல சஞ்ஜீவ’ என்ற பாதாள உலகக் குழு உறுப்பினரின் கொலை வழக்கில் முக்கிய சந்தேகநபரான இஷாரா...

25 68f0b45097e66
செய்திகள்இந்தியாஉலகம்

இந்தியா ரஷ்யாவிடம் இருந்து எரிபொருள் கொள்வனவு செய்யாது: ட்ரம்ப் தகவல்

இந்தியா ரஷ்யாவிடம் இருந்து எரிபொருள் கொள்வனவு செய்யாது என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீண்டும்...

image c348b91fcc
செய்திகள்இலங்கை

அடுத்த கல்வியாண்டு முதல் பாடப்புத்தகங்களுக்குப் பதிலாக சுய கற்றல் கையேடுகள்

அடுத்த கல்வியாண்டில் இருந்து, தரம் 1 மற்றும் தரம் 6 மாணவர்களுக்குப் பாடப்புத்தகங்கள் வழங்கப்படாது என்று...

25 68f3476a27f6c
செய்திகள்உலகம்

பொதுஜன பெரமுன வேட்பாளர்களிடம் இருந்து பொலிஸ் அறிக்கை கட்டாயம்: நாமல் ராஜபக்ச

எதிர்காலத் தேர்தல்களில் பொதுஜன பெரமுனவின் வேட்பாளர்களிடம் இருந்து பொலிஸ் அறிக்கை பெறப்படும் என்று கட்சியின் தேசிய...