புலி உறுப்பினர் என்று கூறி யாழ் இளம் பெண்ணை ஏமாற்றிய புலம்பெயர் தமிழ் இளைஞன்!!
இலங்கைசெய்திகள்

புலி உறுப்பினர் என்று கூறி யாழ் இளம் பெண்ணை ஏமாற்றிய புலம்பெயர் தமிழ் இளைஞன்!!

Share

புலி உறுப்பினர் என்று கூறி யாழ் இளம் பெண்ணை ஏமாற்றிய புலம்பெயர் தமிழ் இளைஞன்!!

புலம்பெயர் இளைஞன் ஒருவன் தன்னை விடுதலைப் புலி உறுப்பினர் என்று கூறிக்கொண்டு யாழ்ப்பாண இளம் பெண்னை திருமணம் செய்து அந்தப் பெண்ணின் நகைகளையும் அபகரித்துச் சென்ற சம்பவம் ஒன்று அண்மையில் நடைபெற்றுள்ளது.

யாழ்ப்பாணம் அச்சுவேலியைப் பிறப்பிடமாகக்கொண்ட ‘க..ன்’ என்ற அந்த இளைஞன் ஜேர்மனியின் பிராங்போர்ட் நகரில் வசித்து வருகின்றார்.

திருமணம் கடந்த மார்ச் மாதம் சென்னை ஆதித்யா மண்டபத்தில் நடைபெற்றது.

சீதனம் என்று கூறி பல இலட்சங்கள்.. மாப்பிள்ளை குடும்பத்தாரின் போக்குவரத்துச் செலவுகள் என்று பல இலட்சங்கள் – இப்படி பெருந்தொகைப் பணம் அவருக்கு பெண்தரப்பால் வழங்கப்பட்டது.

திருமண சம்பிரதாயங்கள் முடிந்து பெண்ணுடன் சில வாரங்கள் தங்கியிருந்த அந்த இளைஞன் ஏப்ரல் மாதம் 12ம் திகதி மறுபடியும் ஜேர்மனி சென்றுவிட்டார்.

‘ஒரு மாதத்தல் உன்னை ஜேர்மனிக்கு எடுத்துவிடுவேன்’ என்று கூறி அவர் ஜேர்மனி புறப்படும் போது பெண்ணிடம் இருந்து 20 பவுன் நகையையும் கொண்டு சென்றுள்ளார்.

ஜேர்மனி சென்று ஒரு வாரத்தில் தனது புது மனைவியைத் தொடர்புகொண்ட ‘க…ன்’ என்ற அந்த இளைஞன், தனக்கு ஜேர்மனியில் ஒரு காதலி இருப்பதாகவும், உன்னுடன் வாழ முடியாது என்று கூறியிருக்கின்றார்.

அந்த பெண் நீதி கேட்டுப் போராட முற்பட்டபோது, தான் ஒரு விடுதலப்புலி உறுப்பினர் என்றும், வாள்வெட்டுக்குழுவை அனுப்பி குடும்பத்தையே அழித்துவிடுவேன் என்றும் அந்தப் பெண்ணை மிரட்டியுள்ளார்.

அந்தப் பெண், திருமண நடந்தது உட்பட தான் மிரட்டப்பட்டது வரை அனைத்து ஆதாரங்களையும் ஒப்புவித்தார்.

இந்தியத் தூதரகம், மனித உரிமை ஆணைக்குழு போன்றனவற்றில் தான் முறைப்பாடுகள் செய்துள்ளதாகவும், ஜேர்மன் தூதராலயத்திலும் அந்த நபர் பற்றிய முறைப்பாடுகளைத் தான் வழங்க உள்ளதாகவும் அந்தப் பெண் எங்களிடம் தெரிவித்தார்.

‘எனக்கு நீதி வேணும் அண்ணா.. என்னை போல யாழ்பாணத்தில் இனி எந்தப் பெண்ணும் இதுபோல பாதிக்கப்பட கூடாது..’ என்று அந்தப் பெண் கண்ணீரோடு கூறிய வார்தைகள் இப்பொழுதும் காதுகளில் ஒலித்துக்கொண்டுதான் இருக்கின்றன. (மனங்களிலும்தான்)

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 53
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வெல்லம்பிட்டியில் 4 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருட்கள் மீட்பு: இருவர் கைது

கொழும்பு, வெல்லம்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் (PNB) நேற்று (மே...

world 52
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொழும்பில் பிடிபட்ட 74 வியட்நாமியர்களுக்கு மே 14 வரை விளக்கமறியல்: நீதிமன்றம் அதிரடி உத்தரவு

கொழும்பு, கொள்ளுப்பிட்டி பகுதியில் உள்ள உத்தராநந்த மாவத்தையில் அமைந்துள்ள குடியிருப்பு வளாகம் ஒன்றில் வைத்து, இணையவழி...

world 51
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஊழலுக்கு எதிராகக் குரல் கொடுத்துப் பதவி விலகிய NPP உறுப்பினர்: ராஜினாமா கடிதம் கசிந்த விவகாரத்தில் சர்ச்சை

தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சியின் குருநாகல் மாநகர சபை உறுப்பினர் பி.டபிள்யூ. பிரேமச்சந்திரா, தனது...

world 50
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தோல் புற்றுநோய் அபாயம்: காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை அவதானம் தேவை

இலங்கையில் தோல் புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகச் சுகாதார மேம்பாட்டுப் பணியகம் எச்சரிக்கை விடுத்துள்ளது....