இலங்கை
வழக்கு ஆவணங்களை மென்று உமிழ்ந்த பெண் சட்டத்தரணி கைது
வழக்கு ஆவணங்களை மென்று உமிழ்ந்த பெண் சட்டத்தரணி கைது
கெக்கிராவ பகுதியில் அமைந்துள்ள மாவட்ட நீதவான் நீதிமன்றில் விசாரணை செய்யப்பட்டு வரும் வழக்கு ஒன்றின் ஆவணங்களின் சில பக்கங்களை சட்டத்தரணி ஒருவர் கிழித்து வாயில் மென்று உமிழ்ந்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் குறித்த பெண் சட்டத்தரணியை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மாவட்ட நீதவான் நீதிமன்றின் சட்டத்தரணி ஒருவரை இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட வழக்கு ஒன்றின் ஆவணங்களையே அவர் இவ்வாறு அழித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
காணி பிணக்கு ஒன்று தொடர்பிலான வழக்கு குறித்த ஆவணங்களின் இரண்டு பக்கங்களை கிழித்து அவற்றை வாயில் போட்டு மென்று உமிழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த சம்பவத்தை நேரில் பார்த்த நீதிமன்ற ஆவணப் பிரிவு அதிகாரிகள், நீதிமன்ற பதிவாளருக்கு இது குறித்து அறிவித்துள்ளனர்.
நீதிமன்ற வளாகத்தில் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரிகளுக்கு இது குறித்து அறிவித்ததையடுத்து அதன் அடிப்படையில் பொலிஸார் குறித்த பெண் சட்டத்தரணியை கைது செய்து உள்ளனர்.
இந்தப் பெண் சட்டத்தரணி கடித்து உமிழ்ந்த ஆவணங்களின் சில பகுதிகளையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.
You must be logged in to post a comment Login