வங்கிகளில் தூக்கமின்றி இரவு பகலாக காத்திருக்கும் மக்கள்
அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவை பெறுவதற்கு மக்கள் வங்கிகளில் நீண்ட வரிசையில் காத்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
சில பகுதிகளில் நிலவும் மோசமான வானிலையையும் பொருட்படுத்தாமல் நேற்று இரவு முதல் இன்று காலை வரை மக்கள் வங்கிகளுக்கு வெளியே காத்திருக்கின்றனர்.
அரச வங்கிகள் திறக்கப்படும் வரை பொது மக்கள் உறங்காமல் காத்திருப்பதாக கூறப்படுகின்றது.
அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவுகள் வங்கிகள் ஊடாக வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் பல நாட்களாக வங்கிகள் முன் நித்திரையின்றி காத்திருப்பதாக அஸ்வெசும பயனாளிகள் தெரிவித்துள்ளனர்.