வவுனியாவில் வாள்வெட்டு சம்பவம்! களமிறங்கிய பொலிஸார்

வாள்வெட்டு சம்பவம்

வாள்வெட்டு சம்பவம்

வவுனியாவில் வாள்வெட்டு சம்பவம்! களமிறங்கிய பொலிஸார்

வவுனியாவில் வாள்வெட்டு மற்றும் தீ வைப்பு சம்பவம் இடம்பெற்ற வீட்டினை கொழும்பிலிருந்து வருகை தந்த பொலிஸாரின் இராசாயன பகுப்பாய்வாளர்கள் இன்று(26.07.2023) சோதனை செய்துள்ளனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வவுனியா, தோணிக்கல் பகுதியில் உள்ள வீடொன்றிற்குள் நுழைந்த 10 பேர் கொண்ட குழு வாள்வெட்டு தாக்குதலில் ஈடுபட்டதுடன், வீட்டிற்கும் பெட்ரோல் ஊற்றி தீ வைத்திருந்தனர்.

இந்த சம்பவத்தில் 21 வயது இளம் குடும்ப பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானதுடன், சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட 10 பேரில் குறித்த பெண்ணின் கணவரான 32 வயது இளம் குடும்பஸ்தர் இன்று (27.07.2023) அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

மேலும், குறித்த சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிசார் பல்வேறு கோணங்களில் விசாரணைகளை முன்னெடுத்து வரும் நிலையில், குறித்த வீடு எரியூட்டப்பட்டமை மற்றும் அங்கு எரிந்த பொருட்கள் தொடர்பில் இராசாயன பகுப்பாய்வை மேற்கொள்வதற்கு கொழும்பில் இருந்து விசேட பொலிசார் வருகை தந்து சம்பவம் நடைபெற்ற இடத்தை பார்வையிட்டு இரசாயன பகுப்பாய்வு செய்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, குறித்த சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிசார் பல்வேறு தரப்புக்களிடமும் வாக்கு மூலம் பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Exit mobile version