மத்திய வங்கி பிறப்பித்துள்ள கடுமையான உத்தரவு
பணவீக்கம் உயர்ந்த மட்டத்தில் இருந்த போது அதனை கட்டுப்படுத்த மத்திய வங்கி வட்டி வீதங்களை அதிகரித்தது. இதனால் வங்கியில் நிலையான மற்றும் குறைந்த வட்டி வீதங்களில் வழங்கப்பட்ட கடன்களுக்கும் வர்த்தக வங்கிகள் வட்டியை அதிகரித்துள்ளன. ஆனால் தற்போது அந்த வட்டி வீதங்களை குறைப்பதற்கு மத்திய வங்கி அறிவுறுத்தியும் வரத்தக வங்கிகள் அவ்வாறு செயற்படவில்லை என கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளியல் துறை சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி கணேசமூர்த்தி தெரிவித்துள்ளார்.
மேலும் கூறுகையில்,“பணவீக்கம் உயர்ந்த மட்டத்தில் இருந்த போது, மத்திய வங்கி ஆவணங்களில் முதலீடு செய்பவர்கள் அவற்றை வாங்க வேண்டும் என்றால் வட்டி வீதங்களை அதிகரிக்க வேண்டிய சூழல் இருந்தது.
இப்போது அந்த நிலை மாறி பணவீக்கம் குறைவதாக மத்திய வங்கியின் புள்ளிவிபரபங்கள் சொல்லுகின்றன.
எனவே வட்டி வீதங்களும் சந்தை வட்டி வீதங்களுக்கு குறைய வேண்டும் என்று தான் இலங்கை மத்திய வங்கியானது தனது இரண்டு கொள்கை வட்டி வீதங்களை குறைத்தது.
மத்திய வங்கியின் கொள்கை வட்டிக்கு ஏற்ப வர்த்தக வங்கிகள் தமது கடன் வழங்கும் வட்டி வீதங்களை சீராக்கிகொள்ளாமல் மிக உயர்ந்த வட்டி வீதங்களை அறவிட முடியாது.
ஆனால் வர்த்தக வங்கிகள் கடன் மீதான வட்டி வீதங்களை குறைக்காமல் வைப்புகள் மீதான வட்டி வீதங்களை மாத்திரமே குறைத்துள்ளன.”என தெரிவித்துள்ளார்.
Leave a comment