ஏழு வீதத்தால் குறைந்த ரூபாயின் மதிப்பு! ஸ்ரீலங்கா எடுத்த நடவடிக்கை
15ஆவது நாளாக ரூபாயின் மதிப்பு சரிந்த நிலையில், நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் வெளிநாடுகளுக்கு அதிக டொலர்களை அனுப்புவதற்கு அந்நிய செலாவணி சந்தை மீதான கட்டுப்பாடுகளை இலங்கை தளர்த்தியது.
ஜூன் 28 முதல் ஆறு மாதங்களுக்கு நடைமுறைக்கு வரும் வகையில் இந்த தளர்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வெளிநாட்டு வணிகத்தை அமைக்க அல்லது விரிவாக்க உள்ளூர் நிறுவனங்கள் 100,000 டொலர்கள் வரை மாற்ற அனுமதிக்கப்படும் என்று மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
இன்று செவ்வாயன்று ஒரு டொலருக்கு எதிரான ரூபாய் 0.4 வீதமாக சரிந்து 330.37 ஆக பரிமாற்றம் செய்யப்பட்டது. அத்துடன் இந்த மாதத்தில் மாத்திரம் ரூபாயின் பெறுமதி 7 வீதத்தால் குறைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.