rtjy 265 scaled
இலங்கைசெய்திகள்

3 வயது இலங்கை சிறுமி உலக சாதனை

Share

3 வயது இலங்கை சிறுமி உலக சாதனை

நுவரெலியா – கொட்டகலையை சேர்ந்த பவிஷ்ணா என்ற சிறுமி உலக சாதனை புத்தகத்தில் (international book of world record) இடம்பிடித்துள்ளார்.

குறித்த பிரதேசத்தை சேர்ந்த செந்தில்குமார் – ரேவதி தம்பதிகளின் புதல்வியே இந்த சாதனையை படைத்துள்ளார்.

தனது மூன்று வயதில், உலக நாடுகளின் 40 தலைவர்களின் புகைப்படங்களை பார்த்து அவர்களின் பெயர்களை ஒரு நிமிடத்தில் மிக வேகமாகக் கூறி உலக சாதனை படைத்துள்ளார்.

உலக சாதனை புத்தக நிறுவனமானது இச்சிறுமியின் திறமையையும், அதீத நினைவாற்றலையும் பரிசீலனை செய்து உலக சாதனை புத்தகத்தில் பதிவு செய்து சாதனைச் சிறுமியாக தமது இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.

கடந்த மார்ச் மாதம் இதற்காக விண்ணப்பித்து ஏப்ரல் மாதம் சாதனை படைத்த சிறுமியாக அறிவித்து இவருக்கான இலச்சினை, பதக்கம், மற்றும் சான்றிதழ் என்பவை அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
images 2 6
செய்திகள்இலங்கை

யாழ்ப்பாணம், வளலாய் கடற்கரையில் பௌத்த சிலை கரையொதுங்கியது – மியன்மாரிலிருந்து வந்திருக்கலாம் என சந்தேகம்!

யாழ்ப்பாணம், வளலாய் பகுதி கடற்கரையில் இன்றைய தினம் (நவம்பர் 17) பௌத்த மதத்துடன் தொடர்புடைய சிலை...

25 6918218c86028
இலங்கைசெய்திகள்

வெளிநாட்டுப் பெண்ணிடம் அநாகரீகமாக நடந்த இளைஞன் எதிர்வரும் நவம்பர் 28 வரை விளக்கமறியலில்!

அம்பாறை மாவட்டம், திருக்கோவில் பிரதேசத்தில் வெளிநாட்டு யுவதி ஒருவருக்குப் பாலியல் தொந்தரவு செய்ததாகக் கூறப்படும் சம்பவம்...

25 68f5630be3ac6
செய்திகள்இலங்கை

இலங்கைச் சிறைச்சாலைகளில் கட்டுக்கடங்காத நெரிசல்: 37,000 கைதிகள் அடைப்பு – ‘500 பேர் நின்று உறங்குகிறார்கள்’ எனப் பாராளுமன்றில் அம்பலம்!

இலங்கைச் சிறைச்சாலைகளில் நிலவும் கட்டுக்கடங்காத நெரிசல் மற்றும் அதன் காரணமாகக் கைதிகள் எதிர்கொள்ளும் மனிதநேயமற்ற நிலைமைகள்...