இலங்கை
ஜனாதிபதித் தேர்தலில் ருவான் விஜேவர்தன
ஜனாதிபதித் தேர்தலில் ருவான் விஜேவர்தன
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் அடுத்த ஜனாதிபதித் தேர்தலிலும் பொதுத் தேர்தலிலும் போட்டியிடப் போவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.
வத்தளை பிரதேசத்தின் புதிய அமைப்பாளராக அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ நியமிக்கப்பட்டுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் பலமண்டல கூட்டத்தில் உரையாற்றிய அவர் குறிப்பிட்டுள்ளார் “ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் பாரிய கூட்டணியில் போட்டியிடுவார்.
இந்த கூட்டணி சிறிலங்கா சுதந்திர கட்சி, பொது ஜன பெரமுன மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி போன்ற உட்பட கட்சிகளில் இருந்தவர்களால் உருவாக்கப்படும் ஜனாதிபதி விக்ரமசிங்க இந்த கட்சிகளை ஒன்றிணைக்க முயற்சி செய்கிறார் என்றும் விஜேவர்தன கூறியுள்ளார்.
முன்னாள் அமைச்சர் ஜோன் அமரதுங்க அரசியலில் இருந்து ஓய்வு பெற்றதன் பின்னர், வத்தளை அமைப்பாளராக ஹரீன் பெர்னாண்டோ நியமிக்கப்படுவார் என அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி, அனுரகுமார திஸாநாயக்க மற்றும் டலஸ் அலகப்பெரும ஆகிய மூவருக்கும் இடையிலான போட்டியே இடம்பெறும் என அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
“எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அடிக்கடி காட்டும் தயக்கம் காரணமாகத் தேர்தலில் போட்டியிட மாட்டார். அடுத்த ஜனாதிபதித் தேர்தலிலும் எதிர்க்கட்சித் தலைவர் தனது ‘ஆசை- பயம் அணுகுமுறையைக் கடைப்பிடிப்பார்” என்று அவர் கூறியுள்ளார்.
You must be logged in to post a comment Login