இலங்கையை இந்திய மாநிலமாக மாற்ற முயற்சி!
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இலங்கையை இந்தியாவின் ஓர் மாநிலமாக மாற்றுவதற்கு முயற்சிக்கின்றார் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
தேசிய சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் காமினி வெலேகொட இந்த குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மீண்டும் இந்தியாவுக்குச் சென்றால் இலங்கையில் எதுவும் மிச்சமிருக்காது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தியாவையும் இலங்கையையும் இணைக்கும் தரைவழிப்பாதை அமைத்தல், எண்ணெய் குழாய் மூலம் இரு நாடுகளையும் இணைத்தல் மற்றும் மின்சார கட்டமைப்பின் ஊடாக இரு நாடுகளையும் இணைத்தல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் ரணிலின் இந்திய விஜயத்தின் போது இணங்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.