rtjy 271 scaled
இலங்கைசெய்திகள்

பாடசாலை விடுமுறை! கல்வி அமைச்சின் அறிவிப்பு

Share

பாடசாலை விடுமுறை! கல்வி அமைச்சின் அறிவிப்பு

அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற பாடசாலைகளுக்கான இரண்டாம் தவணை கற்றல் செயற்பாடுகளின் முதற்கட்ட பணிகள் இன்று(24.07.2023) முதல் ஆரம்பமாவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

இந்த கற்றல் செயற்பாடுகள் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 17ஆம் திகதி வரை இடம்பெறும் எனவும் கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் ஆகஸ்ட் மாதம் 18ஆம் திகதி முதல் 27ஆம் திகதி வரையில் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்படவுள்ளது.

இதனையடுத்து இரண்டாம் தவணையின் இரண்டாம் கட்ட கற்றல் செயற்பாடுகள் ஆகஸ்ட் மாதம் 28ஆம் திகதி முதல் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் மாதம் 27ஆம் திகதி வரையில் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மூன்றாம் கட்ட கற்றல் செயற்பாடுகள் ஒக்டோபர் மாதம் 30ஆம் திகதி முதல் நவம்பர் மாதம் 24ஆம் திகதி வரை இடம்பெறும்.

அத்துடன் மூன்றாம் தவணை கற்றல் செயற்பாடுகள் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதியில் இருந்து பெப்ரவரி மாதம் 16ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.

மேலும் எதிர்வரும் நவம்பர் மாதம் 25ஆம் திகதி முதல் டிசம்பர் மாதம் 31ஆம் திகதி வரையில் கல்வி பொதுத்தராதர உயர்தர பரீட்சை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 45
உலகம்செய்திகள்

பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் உள்ள தனது தூதரகத்தை மூடிய அமெரிக்கா: பாதுகாப்பு கவலைகள் காரணமா?

பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் தலைநகரான பெஷாவரில் நீண்டகாலமாகச் செயல்பட்டு வந்த தனது தூதரக அலுவலகத்தை...

world 44
செய்திகள்இந்தியா

வெள்ளித்திரை முதல் அரசியல் அரியணை வரை: விஜய் முதல் எம்.ஜி.ஆர் வரை

தென்னிந்திய நட்சத்திரங்களின் அரசியல் பயணம்தென்னிந்திய அரசியலில், குறிப்பாகத் தமிழ்நாட்டில், திரையுலகிற்கும் அதிகாரத்திற்கும் இடையிலான பிணைப்பு மிகவும்...

world 42
செய்திகள்இலங்கைபிராந்தியம்

விசா பெற்றுத் தருவதாகக் கூறி ரூ. 3.5 கோடி மோசடி: தனியார் நிறுவன இயக்குநர் கைது

வெளிநாடுகளுக்கு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா விசாக்களைப் பெற்றுத் தருவதாகக் கூறி, பொதுமக்களிடமிருந்து சுமார் 35.8 மில்லியன்...

world 46
செய்திகள்உலகம்

ஜெப்ரி எப்ஸ்டீனின் தற்கொலை குறிப்பு வெளியீடு: எவ்வித ஆதாரங்களும் கண்டறியப்படவில்லை என நீதிபதி அறிவிப்பு

பாலியல் குற்றச்சாட்டுகளின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அமெரிக்க கோடீஸ்வரர் ஜெப்ரி எப்ஸ்டீன், கடந்த 2019-ஆம் ஆண்டு...