இலங்கை
பணமோசடி வழக்கில் நாமலுக்கு நீதிமன்றம் உத்தரவு
பணமோசடி வழக்கில் நாமலுக்கு நீதிமன்றம் உத்தரவு
முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ச மற்றும் சிலருக்கு எதிராக பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் சட்டமா அதிபர் தாக்கல் செய்த வழக்கை விசாரிக்கக் கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நிறுவனம் ஒன்றில் 30 மில்லியன் ரூபாவை முதலீடு செய்தமை தொடர்பிலேயே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த வழக்கு இன்றைய தினம் (24.07.2023) கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்க முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
வழக்கில் அரசு தரப்பு விசாரணை நிறைவடைந்துள்ளதாக கூறப்படுகின்றது.
மேலும், குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 200ஆவது பிரிவின் கீழ், தற்காப்பு சாட்சியத்தை அழைக்காமல், பிரதிவாதிகளை விடுவிக்கக் கோரிக்கை விடுக்கத் தயார் என சட்டத்தரணி முன்பு தெரிவித்துள்ளனர்.
இதன்படி, குறித்த வழக்கை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 13ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
You must be logged in to post a comment Login