கோதுமை மாவின் விலையை குறைக்க மறுக்கும் நிறுவனங்கள்

கோதுமை மாவின் விலையை குறைக்க மறுக்கும் நிறுவனங்கள்

கோதுமை மாவின் விலையை குறைக்க மறுக்கும் நிறுவனங்கள்

கோதுமை மாவின் விலையை குறைக்க மறுக்கும் நிறுவனங்கள்

இலங்கைக்கு கோதுமை மாவை இறக்குமதி செய்யும் இரண்டு நிறுவனங்களிடம், கோதுமை மாவின் விலையை குறைக்குமாறு கோரிய போதிலும் அதனை குறைக்க மறுத்துள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

இரண்டு நிறுவனங்களும் சந்தையில் ஏகபோக உரிமையை அனுபவிப்பதால் வலுப் பெற்றுள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் மாவுக்கான போட்டி விலையை தீர்மானிக்க சந்தையில் போட்டியை உருவாக்க வேண்டும்.

மாவு இறக்குமதியில் குறைந்தது 30 வீதத்தை ஏனைய இறக்குமதியாளர்களுக்கு வழங்க வேண்டும். அதே வேளையில் 70 வீதத்தை இரண்டு பிரதான நிறுவனங்களுக்கு போட்டி விலையை பேணுவதற்காக வழங்க வேண்டும்.

கோதுமை மா இறக்குமதிக்கு தடை விதிக்கப்படுவதற்கு முன்னர், ஒரு கிலோ மா 165 ரூபாய்க்கு இறக்குமதி செய்யப்பட்டது.

இந்தநிலையில் கோதுமை மா இறக்குமதியை மேற்கொள்ளும் இரண்டு நிறுவனங்களும் விலையைக் குறைக்க மறுத்ததையடுத்து, மாவை அத்தியாவசியப் பொருளாகப் பிரகடனப்படுத்தியதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Exit mobile version