வடமாகாண கலைஞர்கள் ஒன்றிணைந்து பண்பாட்டு பேரவை உருவாக்கம்

rtjy 250

வடமாகாண கலைஞர்கள் ஒன்றிணைந்து பண்பாட்டு பேரவை உருவாக்கம்

வடக்கு மாகாணத்திற்கு உட்பட்ட பல கலைஞர்கள் பலர் ஒன்றிணைந்து யாழ் மருதம் கலை பண்பாட்டு பேரவை எனும் அமைப்பை உருவாக்கியுள்ளனர்.

குறித்த நிகழ்வானது இன்று (22/07/2023) வடமராட்சி கிழக்கு கலாசார மத்திய நிலையத்தில் இடம்பெற்றுள்ளது.

கவிஞரும், பாடல் ஆசிரியருமான யாழ் மருதன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் ஆரம்ப நிகழ்வாக மங்கல விளக்கு ஏற்றப்பட்டது.

தொடர்ந்து பாடசாலை மாணவர்களின் நடனம் வாழ்த்துரைகள், பாடல்கள் கவிதைகள் என்பன இடம்பெற்றன.

இதேவேளை வடமராட்சி கிழக்கு பிரதேசத்தில் தரம் ஐந்து புலமை பரிசில் பரீட்சையில் சித்தியெய்திய மாணவர்களும் கௌரவிக்கப்பட்டனர்.

குறித்த நிகழ்வில் வடமாகாணத்திற்கு உட்பட்டு கலந்து கொண்டிருந்த கலைஞர்கள் அனைவரும் பரிசல்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், இந்நிகழ்வில் வட மாகாணத்திற்க்கு உட்பட்ட கலைஞர்கள், பாடசாலை மாணவர்கள்,கலை ஆர்வலர்கள் சமூக ஆர்வலர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Exit mobile version