rtjy 193 scaled
இலங்கைசெய்திகள்

வடமாகாண தனியார் வைத்தியசாலை கழிவுகளை கொழும்புக்கு

Share

வடமாகாண தனியார் வைத்தியசாலை கழிவுகளை கொழும்புக்கு

வடமாகாணத்தில் உள்ள தனியார் வைத்தியசாலை கழிவுகளை கொழும்புக்கு அனுப்பி எரியூட்டப்படுவதாக வடமாகாண சுகாதார சேவைகள் பதில் பணிப்பாளர் வைத்திய கலாநிதி த. சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

யாழ். போதனா வைத்தியசாலை மருத்துவ கழிவுகளை எரியூட்ட கோம்பயன் மணல் மயானத்தில் எரியூட்டியை நிறுவுவதற்கு, யாழ். மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இந்த கழிவுகளை மயானத்தில் எப்பகுதியில் அமைப்பது என்பது தொடர்பில் ஆராயப்பட்டு வருவதாகவும், விரைவில் இடத்தினை அடையாளப்படுத்தி, பணிகளை ஆரம்பிக்க உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் உள்ள எரியூட்டி திருத்தப்பட்டு பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், அங்கு அரச வைத்தியசாலை மருத்துவ கழிவுகள் எரியூட்டப்படும் என்றும் சுகாதார சேவைகள் பதில் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
32 4
இலங்கைசெய்திகள்

எந்தவொரு அரசியல் கட்சியுடனும் கூட்டணி சேரப் போவதில்லை – சாகர

எந்தவொரு அரசியல் கட்சியுடனும் கூட்டணி சேரப் போவதில்லை என ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பொதுச் செயலாளர்...

31 4
இலங்கைசெய்திகள்

மிரட்டுகின்றார் அநுர! சுமந்திரன் பகிரங்க குற்றச்சாட்டு

தங்களிடம் மூன்றிலிரண்டு பெரும்பான்மைப் பலம் உள்ளது என்றும், தன்னிடம் நிறைவேற்று அதிகாரம் உள்ளது என்றும் ஜனாதிபதி...

30 5
இலங்கைசெய்திகள்

நீரில் மூழ்கிய நயினாதீவு படகுப் பாதை

நயினாதீவு – குறிகட்டுவான் இடையே சேவையில் ஈடுபட்ட நிலையில் நீண்ட காலமாக பழுதடைந்து சேவையில் ஈடுபட...

28 7
இலங்கைசெய்திகள்

இலங்கையும் இந்தியாவும் செய்து கொண்ட முக்கிய உடன்படிக்கை

இலங்கையின் வெளிநாட்டு கடன் மறுசீரமைப்பு செயல்முறையின் கீழ், கடன் வரி மற்றும் கொள்வனவாளர் கடன் ஒப்பந்தங்கள்...