மக்களை ஒன்றிணைக்கும் ஜனாதிபதி ரணில்
தற்போதைய ஜனாதிபதி அனைவரையும் இனமத ரீதியாக ஒன்றிணைத்து நல்லிணக்கத்தையும் சமத்துவத்தையும் ஏற்படுத்தி வருவதாக அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் ஏற்பாட்டில் குளோபல் பெயார் கண்காட்சியை யாழில் இன்று(15.07.2023) ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
முன்னைய அரசியல்வாதிகளே இனமத ரீதியாக எங்களை பிரித்து பிளவுபட வைத்தனர். ஆனால் தற்போதைய ஜனாதிபதி அதற்கு மாறாக செயற்படுகிறார்.
இனியும் இனமத ரீதியாக பிரிந்து நிற்காமல் அனைவரும் இணைந்து நாட்டை கட்டியெழுப்ப முன்வர வேண்டுமெனவும் அழைப்பும் விடுத்துள்ளார்.
தேசிய மொழியாக தனிச் சிங்களச் சட்டம் கொண்டுவரப்பட்டதில் இருந்து இன மத ரீதியான பேதங்களை ஏற்படுத்தி முன்னைய அரசியல்வாதிகள் எங்களை பிளவுபட வைத்தனர். அதனாலேயே இனமத ரீதியாக நாங்கள் பிளவுபட்டிருந்தோம். நான் சிங்களவர்களின் தேசிய உடையை அணிவதில்லை.
ஆங்கிலேயர் உடை தான் அணிவதுண்டு. ஆனால் இங்கு தமிழர்களின் உடை அணிந்து வந்துள்ளேன். நாம் எந்த ஆடை அணிந்தாலும் அழகு என்றால் அதற்கு காரணம் எங்களது மனம் அழகாக இருப்பது தான்.
ஆகையினால் நாங்கள் இனமத ரீதியாக பிரிந்நிருந்தது போதும். இனிமேல் நாங்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து நாட்டை கட்டியெழுப்ப வேண்டும்.
குறிப்பாக அபிவிருத்தியடைந்த மற்றும் அபிவிருத்தியடைந்து வரும் நாட்டை நாம் நோக்கினால் இனமத பேதம் இல்லாததால் தான் அந்தநாடுகள் இப்படி வளர்ந்துள்ளதை அவதானிக்க கூடியதாக இருக்கிறது.
எனவே நாமும் எந்தவித பாகுபாடும் இல்லாமல் நாட்டை முன்நோக்கி கொண்டு செல்ல வேண்டும்.
இந்த விடயத்தில் பல்வேறு நாடுகளை நாங்கள் உதாரணத்திற்கு எடுக்காமல் அருகிலுள்ள இந்தியாவை எடுத்து கொண்டால் அங்குள்ள அனைவரும் இந்தியர்கள் என்ற எண்ணத்திலேயே செயற்படுகின்றனர். அதேபோல் நாங்களும் செயற்பட வேண்டும்.
தற்போதைய ஜனாதிபதி இந்த நாட்டை கட்டியெழுப்ப நினைத்தாலும் சிலர் திட்டமிட்ட வகையில் விமர்சனங்களை முன்வைக்கின்றனர்.
அவர்கள் யார் ஏன் இவ்வாறு செயற்படுகின்றார்கள் என்றால் நாட்டைக் கட்டியெழுப்புவதைவிட வேறு அரசியல் காரணங்களே அவர்களுக்கு இருக்கின்றன.
நாட்டில் சமத்துவத்தையும் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்தி நாட்டை மீட்டெடுத்து முன்னோக்கி கொண்டு செல்வதே ஜனாதிபதியின் நோக்கம். அதற்கேற்ற வகையிலையே அவர் தனது செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றார்.
அத்தோடு நல்லிணக்கத்தை வார்த்தைகளால் மட்டுமல்லாமல் அதனை செயலாலும் செயற்படுத்துவது தான் ஜனாதிபதியின் எண்ணக்கருவாகவும் இருக்கின்றது.
ஆகையினால் நல்லிணக்க சமத்துவத்தை ஏற்படுத்த அனைவரும் ஓரணியாக இணைந்து செயற்படுவது மிகவும் அவசியமானது. அந்த வகையிலையே தொடர்ச்சியான செயற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
குறிப்பாக வடக்கிலுள்ள இளைஞர் யுவதிகள் இடைத்தரகர்களிடம் அதிகளவில் ஏமாற்றப்பட்டுள்ளனர். இங்குள்ள செல்வந்தர்கள் ஜரோப்பிய நாடுகளுக்கு சென்றுள்ளனர்.
ஆனால் வறுமையில் வாடுகின்றவர்கள் பொருளாதாரத்தை இழந்து வாழ்க்கையை எப்படி மூன்கொண்டுசெல்வது என சிந்தித்து கொண்டிருக்கின்றனர். அவர்களது பொருளாதாரத்தை உயர்த்தி வாழ்க்கையை மேம்படுத்தும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
வடக்கு தெற்கு என நான் வித்தியாசத்தை பார்க்கவில்லை. அனைவருடனும் பேசி பழகிய போது இனமத ரீதியாக எந்த வேறுபாட்டையும் நான் காணவில்லை.
நல்லிணக்க சமத்துவத்தை ஏற்படுத்தும் செயற்பாடுகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும். இதேவேளை முன்னைய காலங்களில் இந்த அமைச்சர்களாக பதவி வகித்தவர்கள் உங்கள் தங்கள் பிரதேசங்களிலேலே தொழில் பயிற்சி நிலையங்களை அமைத்து வந்ததே தொடர்கதையாக இருக்கிறது.
ஆனால் இதனை மாற்றி நான் யாழில் ஒரு பயிற்சி நிலையத்தை நிறுவுவேன். அனைவரும் ஒரே நாட்டு மக்கள் என்ற அடிப்படையில் நல்லிணக்கத்தையும் சமத்துவத்தையும் பேணும் வகையில் செயற்படுவோம் என தெரிவித்துள்ளார்.
- breaking news sri lanka
- cricket sri lanka
- english news
- jaffna
- local news of sri lanka
- Manusha Nanayakkara
- news from sri lanka
- Ranil Wickremesinghe
- sirasa news
- sri lanka
- sri lanka latest news
- sri lanka news
- sri lanka news tamil
- sri lanka news today
- sri lanka news today tamil
- Sri lanka politics
- sri lanka sports
- sri lanka tamil news live
- sri lanka tamil news today
- sri lanka tamil news today 2023
- sri lanka trending
- sri lankan news
- Srilanka Tamil News
- tamil sri lanka news
- tv news
Leave a comment