இலங்கை
இலங்கையில் கோடிக் கணக்கில் வங்கி உரிமையாளர்களின் சொத்துக்கள்!
இலங்கையில் கோடிக் கணக்கில் வங்கி உரிமையாளர்களின் சொத்துக்கள்!
இலங்கை மத்திய வங்கிக் கொள்கை வட்டி விகிதங்களைக் குறைத்துள்ளதாக அறிவித்துள்ள போதிலும் வணிக வங்கிகள் அதற்கேற்ப வட்டி விகிதங்களைக் குறைக்க நடவடிக்கை எடுக்கவில்லை என தெரியவந்துள்ளது.
இந்த நிலையில், வர்த்தக வங்கிகள் பாரிய இலாபத்தை ஈட்டி வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
இது குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா இன்று ஊடகங்களுக்கு தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,
வணிக வங்கிகளின் வட்டியை குறைக்க வேண்டும் என தான் கோரிக்கை விடுக்கவுள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் கூறினார். அவ்வாறான நிலையில் அந்த கோரிக்கை எவ்வாறு நிறைவேற்றப்படுகின்றது என்பதனை தாம் பார்த்துக் கொண்டிருப்பதாக ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
வட்டியை குறைக்காமல் இருப்பது மிகவும் அநீதியான செயலாகும். இதன் காரணமாக வங்கிகளின் பங்குகள் 20 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும் வங்கி உரிமையாளர்களின் சொத்துக்கள் கோடிக்கணக்கில் அதிகரித்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
You must be logged in to post a comment Login
ஒரு பின்னூட்டத்தை இட நீங்கள் கட்டாயம் உள்நுழைந்திருக்க வேண்டும்.
Pingback: அரச சொத்துக்களை காணவில்லை! உதய கம்மன்பில குற்றச்சாட்டு - tamilnaadi.com