இன்றுடன் கால அவகாசம் நிறைவு!
இலங்கைசெய்திகள்

இன்றுடன் கால அவகாசம் நிறைவு!

Share

இன்றுடன் கால அவகாசம் நிறைவு!

அஸ்வெசும சமூக நலத்திட்டம் தொடர்பான மேன்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகளை சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் தொடர்பில் நாட்டு மக்களுக்கு அவசர அறிவிப்பொன்று வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி இதற்கான மேன்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகளை சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் இன்றுடன் (10.07.2023) நிறைவடையவுள்ளது.

முன்னதாக மேன்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகளை சமர்பிப்பதற்கான கால அவகாசம் கடந்த மாத இறுதியுடன் முடிவடையவிருந்தது.

எனினும், பல தரப்பினரின் கோரிக்கைகளை கருத்தில் கொண்டு கால அவகாசத்தை இன்று வரை நீடிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

அஸ்வெசும சமூக நலன் திட்டத்திற்காக சுமார் 9 இலட்சம் மேன்முறையீடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும், இதுவரை சுமார் 12,000 ஆட்சேபனைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.

எனினும் இன்றும் மேன்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகளை முன்வைக்க முடியும் என நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்பிறகு, மாவட்டச் செயலாளர்கள் மூலம் பெறப்படும் முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகள் உடனடியாக பரிசீலிக்கப்பட்டு இறுதி ஆவணம் வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share

1 Comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
22 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ்ப்பாணத்திலிருந்து காணாமல் போன இரு மீனவர்கள் தமிழ்நாடு கடலோரப் பகுதியில் மீட்பு!

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை ஊரணி கடற்பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை மீன்பிடிக்கச் சென்ற நிலையில் காணாமல் போன இரண்டு...

21 4
செய்திகள்அரசியல்இலங்கை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு: சுரேஷ் சலே மூன்றாவது சந்தேகநபராகப் பெயரிடப்பட்டார்!

அரச புலனாய்வுச் சேவையின் (SIS) முன்னாள் பிரதானியும், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரலுமான சுரேஷ் சலே, உயிர்த்த...

20 3
செய்திகள்உலகம்

அஸர்பைஜான் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான நிலையம் மற்றும் பாடசாலை இலக்கு!

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம் அண்டை நாடுகளுக்கும் பரவி வரும் நிலையில், அஸர்பைஜானின் கட்டுப்பாட்டில்...

19 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

போலி உறுதிப்பத்திரம் தயாரித்த பெண் சட்டத்தரணிக்கு 12 ஆண்டு சிறை: கொழும்பு மேல் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

கொழும்பு பொரளைப் பகுதியில் உள்ள பெறுமதியான காணியொன்றுக்குப் போலி உறுதிப்பத்திரங்களைத் தயாரித்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட பெண்...