இலங்கைசெய்திகள்

கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி இனப்படுகொலையின் சாட்சி

Share
கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி இனப்படுகொலையின் சாட்சி
கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி இனப்படுகொலையின் சாட்சி
Share

கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி இனப்படுகொலையின் சாட்சி

கொக்குத்தொடுவாயில் தோண்டப்படும் மனிதப் புதைகுழிகள் சர்வதேசத்தின் முன்னிலையில் தமிழ் இனப்படுகொலையை நிரூபிப்பதற்குரிய ஆதாரங்களாகும் என்று இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் நேற்று (08.07.2023) சனிக்கிழமை நடைபெற்ற இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், செயற்குழுக் கூட்டத்தில் பிரதானமாகத் தமிழ் அரசுக் கட்சியின் மாநாட்டை நடத்துவது பற்றியும் உறுப்பினர்களையும் கிளைகளையும் பதிவு செய்வதைப் பற்றியும் இனப்படுகொலைக்கு ஒப்பான ஜூலைப் படுகொலைகளின் 40 ஆண்டு நிறைவு சம்பந்தமான நிகழ்ச்சிகளைப் பற்றியும் முக்கியமாகப் பேசியுள்ளோம்.

இத்துடன் இந்த மாத இறுதியில் துக்க நாட்களாக அனைத்து மாவட்டங்களிலும் நிகழ்வுகளைக் கடைப்பிடிக்க அறிவுறுத்தும்படியும் கலந்தாலோசித்து உள்ளோம்.

போரின் போது இடம்பெற்ற இனப்படுகொலை சம்பந்தமாக நாங்கள் ஆய்வுகளை மேற்கொண்டு ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்குழுவில் அறிக்கைகளைச் சமர்ப்பித்திருந்தோம்.

தற்போது கொக்குத்தொடுவாயில் மனிதப் புதைகுழி தோண்டப்படுகின்ற போது துயரம் மிக்க கண்டுபிடிப்பு இடம்பெறுகின்றது. பல இடங்களில் எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்படுகின்றன.

இவை சர்வதேசத்தின் முன்னிலையில் தமிழ் இனப்படுகாலையை நிரூபிப்பதற்குரிய ஆதாரங்களாகும். இதற்கு அரச மற்றும் சர்வதேச ஆணைக்குழு முறையாக இயங்க வேண்டுமெனக் கேட்டுக்கொள்கின்றோம் என தெரிவித்தார்.

தமிழ் அரசுக் கட்சியின் புதிய நிர்வாகம் தெரிவு செய்யப்பட்ட பின் மாநாடு நடத்தப்படும். தமிழ் அரசுக் கட்சியின் மாநாட்டு அமைப்பை அடுத்த மத்திய செயற்குழுக் கூட்டத்தில் அறிவிக்க எதிர்பார்த்துள்ளோம்.

மநாட்டில் தான் பதவி மாற்றம் இடம்பெறுவது சம்பிரதாயம். அதையே கட்சியின் அமைப்பு விதியும் சொல்கின்றது.

தற்போது 7 இலட்சத்துக்கு மேற்பட்டோர் உதவித் தொகை நிறுத்தத்தால் முறையீடுகள் செய்வதற்காகப் போராடுகின்றார்கள்.

அதைப் பற்றி மிக விரைவில் அரசுடனும் சர்வதேச மட்டத்திலும் நாடாளுமன்ற உறுப்பினர்களூடாகக் கலந்தாலோசிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
23 3
உலகம்செய்திகள்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் மூன்றாவது முறையும் போட்டி.! ட்ரம்ப் அளித்த பதில்

அமெரிக்க(us) ஜனாதிபதியாக 3வது முறையாக போட்டியிடுவது குறித்துதான் தீவிரமாக யோசிக்கவில்லை என ஜனாதிபதி ட்ரம்ப்(donald trump)...

22 3
உலகம்செய்திகள்

மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தி மிரட்டும் பாகிஸ்தான்

இந்தியாவுடனான(india) பதற்றத்திற்கு மத்தியில், 2 நாட்களில் 2வது முறையாக ஏவுகணை சோதனை மேற்கொண்டதாக பாகிஸ்தான்(pakistan) தெரிவித்துள்ளது....

21 4
உலகம்செய்திகள்

53 ஆண்டுகள் கழித்து பூமியில் விழும் விண்கலம் : எப்போது தெரியுமா?

53 ஆண்டுகளுக்கு முன்பு விண்ணில் ஏவப்பட்டு தோல்வியடைந்த சோவியத் (Soviet Union) கால விண்கலம் விரைவில்...

25 2
இலங்கைசெய்திகள்

சட்டவிரோத வர்த்தகம் : இலங்கை எத்தனையாவது இடம் பிடித்துள்ளது தெரியுமா…!

சட்டவிரோத வர்த்தகத்தின் சவால்களை சமாளிக்க முடிந்த 158 நாடுகளை உள்ளடக்கிய சமீபத்திய தரவரிசைப்படி, டென்மார்க்(denmark) முதலிடத்திலும்,...