கொழும்பில் வாகனங்களை வைத்திருப்போருக்கு புதிய சிக்கல்!
கொழும்பிற்குட்பட்ட வாகன தரிப்பிடங்களில் வாகனங்களை நிறுத்துவதற்கு வெவ்வேறு கட்டணங்கள் அறவிடப்படுவதாக வாகன உரிமையாளர்கள் மற்றும் சாரதிகள் குற்றம்சுமத்தியுள்ளனர்.
கொழும்பு நகர சபையின் வாகன தரிப்பிடங்கள் மற்றும் வீதிகளில் நிறுத்தப்படும் வாகனங்களுக்கு அறவிடப்படும் தொகையை விட அதிக தொகையை நகர அபிவிருத்தி அதிகார சபை அறவிடுவதாகவும் தெரிவித்துள்ளனர்.
மேலும், தரிப்பிடங்களில் நிறுத்தப்படும் வாகனங்களுக்கு முறையான பற்றுச்சீட்டு, ரசீது வழங்காமல், பல்வேறு கட்டணங்களை வசூலிப்பதால், சாரதிகளுக்கும், போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்களுக்கும் இடையே பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுவதாகவும் தெரிவித்துள்ளனர்.
கொழும்பு மாநகர சபையின் கட்டுப்பாட்டில் உள்ள வாகனத் தரிப்பிடங்களுக்கு இணையான தொகையை நகர அபிவிருத்தி அதிகார சபையின் கட்டுப்பாட்டில் உள்ள வாகனத் தரிப்பிடங்களுக்கும் அறவிட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ள போதிலும், சில வாகனத் தரிப்பிடங்களில் அறவிடப்படும் தொகை அதிகமாக உள்ளதாக வாகன சாரதிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.
கொழும்பு மாநகர சபையினால் வாகனங்களை நிறுத்தும் போது வழங்கப்படும் ரசீது கட்டணம் நகர அபிவிருத்தி அதிகாரசபையின் கீழ் உள்ள வாகன தரிப்பிடங்களில் இருந்து வழங்கப்பட வேண்டுமெனவும் நகர அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இருப்பினும்,கொழும்பு மாநகர சபையும் நகர அபிவிருத்தி அதிகார சபையும் போக்குவரத்தை நிறுத்துவதற்காக சாரதிகளிடம் இருந்து பல்வேறு தொகையை அறவிடுவதாகவும் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், கொழும்பு மாநகர சபையின் கட்டுப்பாட்டில் உள்ள வாகன தரிப்பிடங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களுக்கு அறவிடப்படும் கட்டணம் தொடர்பான விளம்பர பலகைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ள போதிலும், நகர அபிவிருத்தி அதிகார சபையின் கட்டுப்பாட்டில் உள்ள சில வாகன தரிப்பிடங்களில் அவ்வாறான பலகைகளை காட்சிப்படுத்தவில்லையெனவும் தெரிவித்துள்ளனர்.
Leave a comment