முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதாக ஜப்பான் உத்தரவாதம்
இலங்கைசெய்திகள்

முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதாக ஜப்பான் உத்தரவாதம்

Share

முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதாக ஜப்பான் உத்தரவாதம்

இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் (சிலோன் சேம்பர் ஒஃப் கொமர்ஸ்) புதிய தலைவராக துமிந்த ஹுலன்கமுவ தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் 184 ஆவது வருடாந்தப் பொதுக்கூட்டம் கடந்த ஜுன் மாதம் 30 ஆம் திகதி நடைபெற்றது. இக்கூட்டத்திலேயே துமிந்த ஹுலன்கமுவ புதிய தலைவராகத் தெரிவாகியுள்ளார்.

அதேவேளை இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் உபதலைவர் மற்றும் பிரதி உபதலைவராக முறையே ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் தலைவர் கிரிஷான் பாலேந்திரா மற்றும் ஸ்டான்டர்ட் சார்டட் வங்கியின் பிரதம நிறைவேற்று அதிகாரி பிங்குமல் தெவரதந்த்ரி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இது இவ்வாறிருக்க மேற்படி வருடாந்தப் பொதுக்கூட்டத்தில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டிருந்த இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் ஹிடேகி மிஸுகோஷி, அவரது உரையின்போது சர்வதேச நாணய நிதியத்துடனான இணக்கப்பாட்டுக்கு அமைவாகப் பல்வேறு மறுசீரமைப்பு செயற்திட்டங்களைப் பூர்த்திசெய்யவேண்டியதன் அவசியம் குறித்து வலியுறுத்தியுள்ளார்.

‘முக்கிய மறுசீரமைப்புக்களை நடைமுறைப்படுத்துவதன் ஊடாக நிதியியல் உறுதிப்பாடு எட்டப்படுவதுடன், அதன்மூலம் முதலீடுகளில் முன்னேற்றம் மற்றும் வணிகங்களுக்கு ஏற்றவாறான சாதகமான சூழல் ஆகியவற்றை அடைந்துகொள்ளமுடியும். வெளிப்படைத்தன்மையையும் செயற்திறனையும் இடைவிடாத்தன்மையையும் மேம்படுத்தக்கூடிய அத்தகைய மறுசீரமைப்புக்களை மேற்கொள்வதற்கு ஜப்பான் வலுவான ஒத்துழைப்பை வழங்கும்’ என்றும் ஹிடேகி மிஸுகோஷி உத்தரவாதம் அளித்துள்ளார்.

மேலும் கடன் வழங்குனர் நாடாக மாத்திரமன்றி, இலங்கையின் நீண்டகால நட்புநாடு என்ற ரீதியில் இலங்கையின் கடன்மறுசீரமைப்புச் செயன்முறையில் ஜப்பான் முக்கிய பங்காற்றும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
14 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

2026 ஜனவரியில் இலங்கையின் வெளிநாட்டு கையிருப்பு 6.8 பில்லியன் டொலராக உயர்வு!

2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திற்கான இலங்கையின் பொருளாதார நிலவரம் குறித்த அறிக்கையை இலங்கை மத்திய...

12 3
செய்திகள்அரசியல்இலங்கை

இலங்கையின் புதிய அரசியலமைப்பு முயற்சி: 30 ஆண்டுகளுக்கும் மேலாக முடிவின்றித் தொடரும் பயணம்!

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட புதிய அரசியலமைப்பை உருவாக்கும் முயற்சி, பல...

11 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மகளின் நினைவாக இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 4.5 ஏக்கர் நிலத்தை தானமாக வழங்கிய தந்தை!

இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மற்றும் காணியற்ற ஏழைக் குடும்பங்களுக்காக, தனது 16 வயது மகளின் நினைவாக...

10 4
உலகம்செய்திகள்

ஈரான் மீதான கூட்டுத் தாக்குதல்: பதற்றத்தைக் குறைக்க இந்தியா வலியுறுத்தல்!

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் இணைந்து ஈரானில் உள்ள ராணுவத் தளங்கள் மீது தாக்குதல்களை நடத்தியுள்ள...