இலங்கை

மத்திய மலை நாட்டில் அதிக மழைவீழ்ச்சி பதிவு!!

Published

on

மத்திய மலை நாட்டில் அதிக மழைவீழ்ச்சி பதிவு!!

கடந்த சில தினங்களாக மத்திய மலைநாட்டில் பெய்து வரும் மழை காரணமாக மலையகத்தில் இருக்கின்ற நீரேந்தும் பகுதிகளில் நீர் மட்டம் அதிகரித்து காணப்படுகின்றது.

இதற்கமைய மேல் கொத்மலை, விமலசுரேந்திர, காசல்ரீ ஆகிய நீரேந்தும் பகுதிகளில் அதிகமான நீர்மட்டம் காணப்படுகின்றது.

இந்நீரினை வெளியேற்றுவதற்காக இன்றையதினம் (03.07.2023) நீரேந்தும் பகுதிகளில் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் மேல் கொத்மலை நீர்தேக்கத்தில் வான்கதவு ஒன்றும் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் நீர்தேக்க பகுதிகளில் தாழ்வான பிரதேசத்தில் வாழ்கின்ற குடியிருப்பாளர்கள் அவதானத்துடன் இருக்கும் படி அதிகாரிகளினால் பணிக்கப்பட்டுள்ளது.

மேலும், விமலசுரேந்திர நீர்தேக்கமும் முழுமையாக நிரம்பி மேலதிக நீர் இன்று காலை முதல் வான் மேவி பாய்கின்றது.

இதனால் அணைக்கட்டிற்கு கீழ் பகுதியில் ஆற்றை பயன்படுத்துபவர்கள் மற்றும் களனி ஆற்றை பயன்படுத்துபவர்களும் அவதானத்துடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version