இலங்கையின் பரிதாப நிலை - மத்திய வங்கி அதிர்ச்சித் தகவல்
இலங்கைசெய்திகள்

இலங்கையின் பரிதாப நிலை – மத்திய வங்கி அதிர்ச்சித் தகவல்

Share

இலங்கையின் பரிதாப நிலை – மத்திய வங்கி அதிர்ச்சித் தகவல்

இலங்கை அரசாங்கம் வருடத்திற்கு 100 ரூபாய் வருமானத்தைப் பெறும் போது, ​​118 ரூபா கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கு அர்ப்பணிக்க வேண்டிய நிலையில் உள்ளதென மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

மத்திய வங்கியினால் வெளியிட்டப்பட்ட ஆய்வு அறிக்கைக்கு அமைய இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

பிரித்தானியா ஊடகமான பிபிசி வானொலியில் இந்த விடயம் தொடர்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மத்திய வங்கி அறிக்கைக்கமைய, மொத்த உள்நாட்டு உற்பத்தியின் சதவீதமாக இலங்கையின் நிலுவையிலுள்ள கடன் 118.7 சதவீதம் என தெரியவந்துள்ளது.

இதற்கிடையில், 2032 ஆம் ஆண்டளவில் இந்த கடன் சதவீதத்தை 95% ஆக குறைக்க திட்டமிட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

அரசாங்கம் அதன் பிற செலவுகள் இருந்த போதிலும் நாட்டின் கடன் தவணை மற்றும் கடன் வட்டியை செலுத்துவதற்காக வருடாந்த அரசாங்க வருவாயில் 70 சதவீதத்தை செலவிட்டுள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 202
செய்திகள்உலகம்

மத்திய கிழக்கு அமைதி முன்னெடுப்பு: உலக நாடுகளின் பாராட்டைப் பெறும் பாகிஸ்தானின் மத்தியஸ்தப் பங்கு!

மத்திய கிழக்கில் அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே நிலவும் போர் பதற்றத்தைத் தணிக்கும் முயற்சிகளில் பாகிஸ்தான் ஒரு...

world 201
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அமைதிப் பேரணிக்காக இலங்கை வரும் ‘அலோகா’: விமானத்தில் பயணிகளுடன் பயணிக்கச் சிறப்பு அனுமதி!

இலங்கையில் எதிர்வரும் ஏப்ரல் 21-ஆம் தேதி முதல் 28-ஆம் தேதி வரை நடைபெறவுள்ள சர்வதேச “அமைதிப்...

world 200
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வாகன இலக்கத் தகடுகளில் மாற்றமா? பொலிஸார் விடுத்துள்ள கடும் எச்சரிக்கை!

இலங்கையில் மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தினால் அங்கீகரிக்கப்பட்ட தரநிலைகளுக்குப் புறம்பாக, தரமற்ற மற்றும் வர்ணமயமான வாகனப் பதிவு...

world 197
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கைக்கு ஒரு பேரல் எண்ணெய் $286: உலகளாவிய எரிசக்தி நெருக்கடியில் சிக்கிய தீவு தேசம்!

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால் ஏற்பட்டுள்ள உலகளாவிய எண்ணெய் நெருக்கடி, காகித வர்த்தகத்தைத் தாண்டி...