இலங்கைசெய்திகள்

அதிக பெறுமதியுடைய கேரள கஞ்சாவுடன் இருவர் கைது

Share
கேரள கஞ்சாவுடன் இருவர் கைது
Share

கேரள கஞ்சாவுடன் இருவர் கைது!

மன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பள்ளமடு வீதியில் வைத்து நேற்று (1) மாலை 85 கிலோ கேரள கஞ்சா பொதிகளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மன்னார் மாவட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவு காவல்துறையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலைத் தொடர்ந்து அப்பகுதிக்குச் சென்ற போது வாகனம் ஒன்றில் கொண்டு செல்லப்பட்ட சுமார் ஒரு கோடி ரூபாவுக்கும் அதிகமான பெறுமதியுடைய 85 கிலோ கிராம் கேரள கஞ்சா மீட்கப்பட்டதுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் 35 வயதுடைய மன்னார் பேசாலை, மற்றும் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதிகளை சேர்ந்தவர்கள் எனத் தெரிய வந்துள்ளது.

மேலும் இருவர் தப்பிச் சென்றுள்ள நிலையில் அவர்கள் பயன்படுத்திய இரண்டு மோட்டார் சைக்கிள்களும் மீட்கப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைக்காக சந்தேக நபர்களும், மீட்கப்பட்ட கஞ்சா பொதிகள், வாகனம், மோட்டார் சைக்கிள் ஆகியவை மன்னார் காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகளை மன்னார் காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்

Share

1 Comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
23 3
உலகம்செய்திகள்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் மூன்றாவது முறையும் போட்டி.! ட்ரம்ப் அளித்த பதில்

அமெரிக்க(us) ஜனாதிபதியாக 3வது முறையாக போட்டியிடுவது குறித்துதான் தீவிரமாக யோசிக்கவில்லை என ஜனாதிபதி ட்ரம்ப்(donald trump)...

22 3
உலகம்செய்திகள்

மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தி மிரட்டும் பாகிஸ்தான்

இந்தியாவுடனான(india) பதற்றத்திற்கு மத்தியில், 2 நாட்களில் 2வது முறையாக ஏவுகணை சோதனை மேற்கொண்டதாக பாகிஸ்தான்(pakistan) தெரிவித்துள்ளது....

21 4
உலகம்செய்திகள்

53 ஆண்டுகள் கழித்து பூமியில் விழும் விண்கலம் : எப்போது தெரியுமா?

53 ஆண்டுகளுக்கு முன்பு விண்ணில் ஏவப்பட்டு தோல்வியடைந்த சோவியத் (Soviet Union) கால விண்கலம் விரைவில்...

25 2
இலங்கைசெய்திகள்

சட்டவிரோத வர்த்தகம் : இலங்கை எத்தனையாவது இடம் பிடித்துள்ளது தெரியுமா…!

சட்டவிரோத வர்த்தகத்தின் சவால்களை சமாளிக்க முடிந்த 158 நாடுகளை உள்ளடக்கிய சமீபத்திய தரவரிசைப்படி, டென்மார்க்(denmark) முதலிடத்திலும்,...