இலங்கை
தமிழர் பகுதியில் இரகசிய விகாரை! தமது இலக்கை அடைந்த பௌத்த பிக்குகள்
தமிழர் பகுதியில் இரகசிய விகாரை! தமது இலக்கை அடைந்த பௌத்த பிக்குகள்
வவுனியா வடக்கு நெடுங்கேணி வெடிவைத்தகல் பகுதியில் கச்சல் சமளங்குளம் என்ற தமிழர் பகுதியில் புதிய விகாரை ஒன்று நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
குறித்த விகாரையின் சுற்றுப்புறம் காட்டுப்பகுதியாக காணப்பட்ட நிலையில், இந்த விகாரையின் நிர்மாணிப்பு பணிகள் கடந்த நாட்களில் யாரும் அறியாத வகையில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சப்புமல்கஸ்கட ரஜமகா விகாரை என்று பெயரிடப்பட்ட இந்த விகாரையில், நாளைய பூரணை தினத்தில் வழிபாடுகள் ஆரம்பிக்கவுள்ளன.
குருந்தூர் விகாரை பிக்கு கல்கமுவ சந்தபோதி தேரர் தலைமையில் இராணுவத்தால் இந்த விகாரை கட்டப்பட்டுள்ளது.
ருவென்வெலிசாய விகாரையில் இருந்து தமிழர் பகுதியான வவுனியாவில் உள்ள சப்புமல்கஸ்கட ரஜமகா விகாரை நோக்கி பௌத்த பிக்குகள் பாதயாத்திரை ஒன்றை ஆரம்பித்திருந்தனர்.
அனுராதபுரத்தில் உள்ள வராலற்று சிறப்புமிக்க ருவென்வெலிசாய விகாரையில் கடந்த 28 ஆம் திகதி கல்காமு சாந்தபோதி பௌத்த பிக்கு தலைமையில் ஆரம்பமான குறித்த பாத யாத்திரையானது இன்று (01.07.2023) வவுனியாவை சென்றடையவுள்ளது.
இந்நிலையில் பௌத்த பிக்குகளால், புதிய சப்புமல்கஸ்கட ரஜமகா விகாரையில் நாளைய தினம் விசேட வழிபாடுகள் ஆரம்பிக்கபடவுள்ளன.
You must be logged in to post a comment Login