பேருந்து லொறியுடன் மோதி விபத்து!
பயணிகளுடன் சென்ற பேருந்து லொறியுடன் மோதி விபத்துக்குள்ளானதில் 8 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச் சம்பவம் மாரவில மூடுகடுவ பிரதேசத்தில் நேற்று காலைதான் பெற்றுள்ளதாக மாரவில தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொழும்பில் இருந்து யாழ் நோக்கி பயணித்த பெருந்தே விபத்துள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹலவத்தை – கொழும்பு பிரதான வீதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
முதுகடுவ பிரதேசத்தில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இருந்து எரிபொருளை பெற்றுக்கொண்டு பிரதான வீதியில் சென்று கொண்டிருந்த பேருந்தின் மீது லொறி மோதியதில் பேருந்து வேகக்கட்டுப்பாட்டை இழந்து மின் கம்பத்துடன் மோதியுள்ளது.
இதன் காரணமாக மின்கம்பம் சேதமடைந்துள்ளதுடன் மாரவில உள்ளிட்ட பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
மேலும் இந்த விபத்தில் காயமடைந்தவர்களில் பேருந்து சாரதியும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
#srilankaNews
 
 
 
                     
                             
                                 
				             
				             
				             
				             
 
 
 
 
 
 
 
Leave a comment