புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் அறிவிப்பு

tamilni 148

புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் அறிவிப்பு

புலமைப்பரிசில் பரீட்சை நடைபெற உள்ள நிலையில் பரீட்சை தொடர்பான செயலமர்வுகள்,கருத்தரங்குகள், மற்றும் பயிற்சி வகுப்புகளை பரீட்சை முடியும் வரை தடைசெய்துள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

குறித்த தடையானது நேற்று (11.10.2023) நள்ளிரவு முதல் நடைமுறைப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தடையை மீறுபவர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.

புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் 15ஆம் திகதி 2888 பரீட்சை மத்திய நிலையங்களில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version