ஆரம்பமானது க.பொ.த சாதாரணதர விடைத்தாள் திருத்தும் பணிகள்

24 66650a84620c1

ஆரம்பமானது க.பொ.த சாதாரணதர விடைத்தாள் திருத்தும் பணிகள்

2023 ஆம் ஆண்டுக்கான சாதாரணதர பரீட்சையின் விடைத்தாள்கள் திருத்தும் பணிகளானது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், குறித்த திருத்த பணிகளானது நேற்றைய தினம் (08) ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு, விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் பணிகளானது நேற்று முன்தினம் (07) ஆரம்பமாகவிருந்தது.

இருப்பினும், நாட்டில் நிலவும் மோசமான வானிலை காரணமாக பரீட்சை இன்று வரை பிற்போடப்பட்டதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

மேலும், கடந்த மே மாதம் ஆறாம் திகதி ஆரம்பமாகிய பரீட்சை 15 ஆம் திகதி வரை நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version