யாழ்.மாவட்டத்தில் கணித பிரிவில் முதலிடம் பெற்ற மாணவன்

24 665a0f6ecb320

யாழ்.மாவட்டத்தில் கணித பிரிவில் முதலிடம் பெற்ற மாணவன்

க.பொ.த உயர்தர பரீட்சையில் கணித பிரிவில் யாழ் மாவட்ட மட்டத்தில் முதலிடம் பெற்று மாணவன் மதியழகன் டினோஜன் சாதனை படைத்துள்ளார்.

2023ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் இன்று (31) வெளியாகியுள்ளன.

இந்நிலையில், குறித்த மாணவன் கணித பிரிவில் மாவட்ட மட்டத்தில் முதலிடமும், அகில இலங்கை ரீதியில் 47 ஆவது இடத்தினையும் பெற்றுள்ளார்.

அத்தோடு யாழ்.மீசாலை வீரசிங்கம் மத்திய கல்லூரி மாணவனான ம. டினோஜன் பொறியியல் பீடத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை, 2023ஆம் ஆண்டிற்கான க.பொ.த உயர்தர பரீட்சை கடந்த ஜனவரி மாதம் இடம்பெற்றிருந்த நிலையில் 346,976 பரீட்சாத்திகள் நாடு முழுவதிலுமிருந்து தோற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version