பெரிய வெங்காயம், டின் மீன் வரியில் மாற்றம்!!

1670165599 1670163546 tin t 1

பெரிய வெங்காயம் மற்றும் டின் மீன்களுக்கு விதிக்கப்பட்டுள்ள விசேட பண்ட வரியை திருத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

டிசம்பர் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் உரிய வரி திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நிதி, பொருளாதார உறுதிப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன்படி கடந்த செப்டெம்பர் 22ஆம் திகதி முதல் ஒரு கிலோகிராம் வெங்காயத்திற்கு விதிக்கப்பட்டிருந்த 50 ரூபா விசேட பண்ட வரி 10 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, கடந்த மே 18 ஆம் திகதி முதல் ஒரு கிலோகிராம் டின் மீன்களுக்கு அறவிடப்பட்டுவந்த 100 ரூபா விசேட பண்ட வரி 200 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

#SriLankaNews

Exit mobile version