சுகாதார அமைச்சு உட்பட முக்கிய அமைச்சுக்களில் மாற்றம்
சுகாதார அமைச்சு உட்பட சில முக்கியமான அமைச்சுக்களில் மாற்றங்களை ஏற்படுத்துவதற்கு அரசு ஆலோசித்து வருகின்றது என்று அறிய முடிகின்றது.
சுகாதார அமைச்சராக ரமேஷ் பத்திரனவை நியமிப்பதற்கு அரசு ஆலோசிக்கின்றது என்றும், வெளிவிவகார அமைச்சுப் பதவி பேராசிரியர் ஜி.எல்.பீரிஸூக்கு வழங்கப்படவுள்ளது என்றும் தெரியவருகின்றது.
மின்சக்தி, சுற்றுலா, கல்வி, ஊடகம் ஆகிய அமைச்சுக்களிலும் மாற்றங்கள் ஏற்படலாம் என்று அறியமுடிகின்றது.
கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவருக்கும் இராஜாங்க அமைச்சுப் பொறுப்பு வழங்குவது தொடர்பாகவும் அரசு ஆராய்கின்றது என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.