பாதுகாப்பு அமைச்சு வெளியிட்டுள்ள அறிவிப்பு

tamilnaadi 30

பாதுகாப்பு அமைச்சு வெளியிட்டுள்ள அறிவிப்பு

இலங்கையின் உள்நாட்டு போரில் பாதிக்கப்பட்ட இராணுவ வீரர்களுக்கான சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை அவர்களின் சேவை காலம் நிறைவு வரை தொடர்ச்சியாக வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயத்தை பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

இதன்படி 2009 இறுதி யுத்தம் வரையில் உயிரிழந்த மற்றும் ஊனமுற்ற இராணுவ வீரர்களுக்கான சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை அவர்களின் சேவை காலம் நிறைவு வரை தொடர்ச்சியாக வழங்கப்படும்.

மேலும் அவர்களின் 55 ஆவது பிறந்த நாள் வரை குறித்த கொடுப்பனவுகளை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

Exit mobile version