அரச சேவைக்கு ஆட்சேர்ப்பு தொடர்பில் தகவல்

tamilnid 15

அரச சேவைக்கு ஆட்சேர்ப்பு தொடர்பில் தகவல்

20000 ஆசிரியர்களுக்கான வெற்றிடம் உள்ளதால் மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (19.2.2023) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த இதனைக் குறிப்பிட்டார்.

அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,

ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதில் 10 மாத கால தாமதம் ஏற்பட்டுள்ளது. ஆட்சேர்ப்பை நிறுத்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அடுத்த இரண்டு வாரங்களில் நீதிமன்ற தீர்ப்பு கிடைத்தால் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்ப முடியும்.

இதுதவிர, ஆசிரியர் சேவை யாப்பின் படி,விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப வெற்றிடங்களுக்கு ஆட்சேர்ப்பது தொடர்பான பரீட்சை மார்ச் முதல் வாரத்தில் நடத்தப்பட்டு, மார்ச் இறுதிக்குள் ஆள்சேர்ப்பு நடைபெறும் என தெரிவித்துள்ளார்.

Exit mobile version