நாட்டை விட்டு வெளியேறியுள்ள 2000 விரிவுரையாளர்கள்
இலங்கைசெய்திகள்

நாட்டை விட்டு வெளியேறியுள்ள 2000 விரிவுரையாளர்கள்

Share

நாட்டை விட்டு வெளியேறியுள்ள 2000 விரிவுரையாளர்கள்

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவில் (UGC) பதிவு செய்யப்பட்ட தரவுகளின்படி, கடந்த ஒன்றரை வருடங்களில் கிட்டத்தட்ட 2,000 விரிவுரையாளர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர், இதில் கடந்த 6 மாதங்களில் 600 பேர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர் எ‌ன்று‌ பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு (FUTA), தலைவர் பேராசிரியர் பரண ஜயவர்தன தெரிவித்தார்.

நாட்டில் உள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் 11,900 விரிவுரையாளர்கள் இருக்க வேண்டும், ஆனால் தற்போது,600 பேர் மட்டுமே உள்ளனர்.

பெ ரும்பாலான விரிவுரையாளர்கள் நாட்டை விட்டு வெளியேறி நாடு திரும்பவில்லை.அவர்களில் பெரும்பாலோர் சேவையை விட்டு வெளியேறியதாக அந்தந்த பல்கலைக்கழகங்களுக்கு தெரிவிக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

“2017 ஆம் ஆண்டில் அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் 30,000 புதிய மாணவர் சேர்க்கைகள் மட்டுமே நடந்துள்ளன. பின்னர், 2021 இல் 34,000 ஆக அதிகரிக்கப்பட்டது, இது 2017 உடன் ஒப்பிடும்போது 50 சதவிகிதம் அதிகரித்துள்ளது.

எனினும் துரதிர்ஷ்டவசமாக,புதிய விரிவுரையாளர் நியமனங்களின் எண்ணிக்கை 2017 க்குப் பிறகு அதிகரிக்கவில்லை என பேராசிரியர் ஜெயவர்தன தெரிவித்தார்.

மேலும், விரிவுரையாளர்களுக்கு சில நிவாரணங்களை வழங்குவதாக கடந்த மார்ச் மாதம் அரசாங்கம் உறுதியளித்த போதிலும் இதுவரையில் எதுவும் நடக்கவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

துரதிஷ்டவசமாக பொருளாதார வீழ்ச்சி காரணமாக புதிய விரிவுரையாளர்களை நியமிப்பதை அரசாங்கம் நிறுத்தியுள்ளது.

இந்தநிலையில் கடந்த 6 மாதங்களில் நாட்டை விட்டு வெளியேறிய விரிவுரையாளர்களுக்கு பதிலாக புதிய நியமனங்களை வழங்குமாறு ஜனாதிபதி அந்தந்த அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், விரிவுரையாளர்களை ஏற்கனவே உள்ள தொகுதிகளில் இருந்து தேர்ந்தெடுக்க வேண்டும். அவர்களில் பெரும்பாலானவர்களுக்கு வெளிநாட்டு பயிற்சி தேவை.

அவர்களுக்கு வெளிநாட்டு பயிற்சி அளிக்கப்பட்டால், அவர்கள் நாடு திரும்புவது சந்தேகம் என்றும் பேராசிரியர் ஜெயவர்தன குறிப்பிட்டுள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 9
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

இலங்கையில் மழை மற்றும் கடும் வெப்பம்: வானிலை ஆய்வு மையத்தின் முக்கிய எச்சரிக்கை!

இலங்கையின் பல மாகாணங்களில் இன்று (ஏப்ரல் 06, 2026) பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை...

world 8
உலகம்செய்திகள்

லெபனானில் இஸ்ரேல் வான் தாக்குதல்: ஈஸ்டர் தினத்தில் 4 வயது குழந்தை உட்பட 7 பேர் பலி!

மத்திய கிழக்கில் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், தெற்கு லெபனானின் கஃபர்ஹதா (Kafr Hatta) கிராமத்தின்...

world 7
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஹோமகமவில் இன்று 12 மணிநேர நீர்வெட்டு!

தற்போது நிலவி வரும் கடும் வறண்ட வானிலை காரணமாக, ஹோமகம மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில்...

world 6
செய்திகள்உலகம்

உள்கட்டமைப்பைத் தாக்கினால் பதிலடி: டிரம்பிற்கு ஈரான் கடும் எச்சரிக்கை!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் கடுமையான மிலிட்டரி அச்சுறுத்தல்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், ஈரானின் உள்கட்டமைப்புகள்...