யாழில் 20 இளைஞர்களை புனர்வாழ்வுக்கு அனுப்ப நடவடிக்கை

tamilni 410

யாழில் 20 இளைஞர்களை புனர்வாழ்வுக்கு அனுப்ப நடவடிக்கை

யாழ்ப்பாணத்தில் பொலிஸாரின் விசேட நடவடிக்கை காரணமாக கைதான 20 இளைஞர்களை மறுவாழ்வு மையத்திற்கு அனுப்ப நடவடிக்கை எடுத்துள்ளதாக யாழ்.பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜகத் விஷாந்த தெரிவித்துள்ளார்.

யாழில் போதைக்கு எதிராக பொலிஸாரினால் கடந்த சில தினங்களாக முன்னெடுப்பட்டு வரும் விசேட நடவடிக்கையின் போது 100கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில், கைது செய்யப்பட்டவர்கள் போதைப்பொருளை கடத்தியமை, உடைமையில் வைத்திருந்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டிலேயே கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களில் ஹெரோயின் வைத்திருந்த குற்றச்சாட்டில் 27 பேரும், ஐஸ் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் 04 பேரும் , கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டில் 30 பேரும் மற்றும் போதை மாத்திரைகள் வைத்திருந்த குற்றச்சாட்டில் 27 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவ்வாறு கைதானவர்களில் 20 பேர் போதைக்கு அடிமையானவர்கள் என பொலிஸ் விசாரணைகளின் போது கண்டறிந்துள்ளோம்.

அவர்களை நீதிமன்றில் முற்படுத்தி நீதிமன்றம் ஊடாக போதை மறுவாழ்வு மையத்திற்கு அனுப்ப நடவடிக்கை எடுத்துள்ளோம் என தெரிவித்துள்ளார்.

Exit mobile version