வன்னி நாடாளுமன்ற உறுப்பினரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ரிசார்ட் பதியுதீனால் 20 தமிழ் மற்றும் சிங்கள தம்பதியினருக்கு பதிவு திருமணம் செய்து வைக்கப்பட்டது.
வவுனியா மாநகர சபை கலாசார மண்டபத்தில் நேற்று (07.10.2025) இடம்பெற்ற குறித்த திருமண நிகழ்வில் பத்து தமிழ் தம்பதியினரும் 10 சிங்கள தம்பதியினருக்கும் திருமணம் செய்து வைக்கப்பட்டிருந்தது.
குறித்த நிகழ்வில் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர்களான ரிசாட் பதியுதீன், முத்துமுகமது மற்றும் மத குருமார் வவுனியா மாநகர மேயர், துணை மேயர் மற்றும் பிரதேச சபை தலைவர்கள் உட்பட உள்ளூராட்சி மன்ற பிரதிநிதிகள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.