வெலிக்கடை சிறைச்சாலையின் இரண்டு அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொரளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த இரண்டு அதிகாரிகளிடமிருந்தும் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறைச்சாலையின் அவசர பதிலளிப்பு பிரிவின் பொறுப்பதிகாரி ஒருவரும், சாதாரண பணியில் ஈடுபட்டு வந்த பொறுப்பதிகாரி ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த அதிகாரிகளிடமிருந்து ஹெரோயின், ஐஸ் போன்ற போதைப் பொருட்கள் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மகசீன் சிறைச்சாலை அதிகாரியின் தகவல்களுக்கு அமைய இந்த இரண்டு அதிகாரிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலனறுவை மற்றும் அவிசாவளை பகுதிகளைச் சேர்ந்த அதிகாரிகளே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் பொரளை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.