மொனராகல, ஹம்பேகமுவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அலுத்வெவ பகுதியில் இருவர் மீது கற்களால் தாக்குதல் மேற்கொண்டமையினால் ஒருவர் உயிரழிந்துள்ளார்.
காயமடைந்த இருவரில் ஒருவர் ஹம்பேகமுவ பிராந்திய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக ஹம்பேகமுவ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பலாங்கொடையை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான சமரதுங்க ஆராச்சிகே ராஜபக்ஷ மற்றும் அதே பகுதியை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான ஹேவாவலிமுனிகே குணதாச ஆகியோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
முச்சக்கர வண்டி சாரதியான சமரதுங்க ஆராச்சிகே ராஜபக்ஷ, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
காயமடைந்த மற்றைய நபர் மேலதிக சிகிச்சைக்காக எம்பிலிப்பிட்டிய ஆதார மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
முதற்கட்ட விசாரணையில், ஒரு கும்பல் கற்கள் மற்றும் ஆயுதங்களால் இருவரையும் முகம் மற்றும் தலையில் தாக்கியதாக தெரியவந்துள்ளது.
இந்தக் கொலையை செய்தவர்களைக் கைது செய்ய பொலிஸார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
உயிரிழந்தவரின் மரணம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுக்க பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.