25 6844220207a6e
இலங்கைசெய்திகள்

கடந்த ஆட்சிகளின் நடந்த மற்றுமொரு பாரிய மோசடி! பலர் உயிரிழப்பின் பின்னணி

Share

2009க்கு முன்பு வழங்கப்பட்ட 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை புதுப்பிக்க தேவையில்லாத 2 மில்லியனுக்கும் அதிகமான ஓட்டுநர் உரிமங்களை இரத்து செய்ய மோட்டார் போக்குவரத்து திணைக்களம் பரிந்துரை செய்துள்ளது.

எனினும் வழங்கப்பட்ட பரிந்துரையை போக்குவரத்து அமைச்சு கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

கடந்த காலத்தில் ஏற்பட்ட பெரும்பாலான கடுமையான விபத்துக்கள், 2009 ஆம் ஆண்டுக்கு முன்பு கனரக வாகன ஓட்டுநர் உரிமங்களைப் பெற்ற சாரதிகளால் ஏற்பட்டவை என தெரியவந்துள்ளது.

மோட்டார் போக்குவரத்து திணைக்களம் சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு குறித்த பரிந்துரையை செய்திருந்த போதும் அதனை நடைமுறைப்படுத்தப்படவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

புதிய மருத்துவ சான்றிதழ்களை பெற்ற பிறகு, பின்னர் சாரதிகளின் உரிமங்களை ரத்து செய்து, அந்த ஓட்டுநர் உரிமம் வைத்திருப்பவர்களுக்கு புதிய ஓட்டுநர் உரிமங்களை வழங்க முன்னாள் மோட்டார் போக்குவரத்து ஆணையர் நாயகத்தால் முடிவு எடுக்கப்பட்டது.

எனினும் கடந்த அரசாங்கத்தின் பலமான நபரால் இந்த பரிந்துரை இடைநிறுத்தப்பட்டது.

மோட்டார் வாகன ஆய்வாளர்கள் தலைமையிலான திணைக்கள தலைவர்கள், எதிர்காலத்தில் இந்த ஓட்டுநர் உரிமங்கள் தொடர்பாக உடனடி நடவடிக்கை எடுக்குமாறு, சமகால அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆனால் இதுவரை இது தொடர்பாக எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என தகவல் வட்டாரங்கள் தெரிவித்தன. 10 முதல் 15 ஆண்டுகளுக்கு முன்பு இந்த ஓட்டுநர் உரிமங்களைப் பெற்ற ஓட்டுநர்கள் உடல் ரீதியாக பலவீனமானவர்களாக இருக்கலாம் என மோட்டார் வாகன ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.

மேலும், இதுபோன்ற ஓட்டுநர்கள் விபத்துக்களை ஏற்படுத்த அதிக வாய்ப்புள்ளது என்றும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Share

Recent Posts

தொடர்புடையது
images 8
செய்திகள்இலங்கை

யாழ். செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு ஒத்திவைப்பு: மழை காரணமாக அடுத்த ஆண்டு ஜனவரி 19-இல் மீண்டும் ஆராய முடிவு!

யாழ்ப்பாணம் செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் குறித்துத் தீர்மானம் ஒன்று எடுக்கப்பட்டுள்ளது....

image d1460108ca
இலங்கைசெய்திகள்

உயிர் அச்சத்துடன் பயணிக்கும் மக்கள்: ஒட்டுசுட்டான் பனிக்கன்குளத்தில் தொடருந்து கடவை அமைக்கக் கோரிக்கை!

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பனிக்கன்குளம் கிராம அலுவலர் பிரிவில், தொடருந்து கடவை...

25 690859776f0a2
செய்திகள்இலங்கை

காவல்துறைக் காவலில் இருந்த சந்தேகநபர் உயிரிழப்பு: கந்தேகெட்டிய சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகள்!

நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட இரண்டு பிடியாணைகளின் பேரில் கைது செய்யப்பட்ட 46 வயதுடைய சந்தேக நபர் ஒருவர்,...