4 29
இலங்கைசெய்திகள்

இலங்கையில் முதல் முறையாக சிறுவனின் வயிற்றில் மிக நீளமான நாடாப்புழு கண்டுபிடிப்பு

Share

இலங்கையில் முதன்முறையாக சிறுவனின் வயிற்றில் மிக நீளமான நாடாப்புழுவை மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் ஒட்டுண்ணியியல் திணைக்களம் கண்டுபிடித்துள்ளது.

இந்த நாடாப்புழு 70 சென்றி மீற்றர் நீளத்தை விடவும் அதிகமாகும். இந்த நாடாப்புழு 10 வயது சிறுவனின் உடலில் காணப்பட்டதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த ஆராய்ச்சியை, கொழும்பு மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் சுரங்க தொலமுல்லா மற்றும் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் ஒட்டுண்ணியியல் துறையின் தலைமை நிபுணர் ரோஹித முத்துகல ஆகியோரின் மேற்பார்வையின் கீழ், ஒட்டுண்ணியியல் துறையின் தலைமை மருத்துவ ஆய்வக விஞ்ஞானி துஷார தந்திரிகே மேற்கொண்டார்.

இந்த நாடாப்புழு குரங்கினத்தை சேர்ந்தது என்றாலும், எதிர்காலத்தில் மூலக்கூறு உயிரியலைப் பயன்படுத்தி இனத்தை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த வகை நாடாப்புழு குரங்குகளால் பரவுகிறது. நாடாப்புழு முட்டைகள் குரங்கின் மலத்துடன் கலந்து மண்ணில் உள்ள ஒரு சிலந்திப் பூச்சியால் உட்கொள்ளப்படுகின்றன. பின்னர் நாடாப்புழு இனப்பெருக்கத்தினை செய்கின்றன.

பழங்கள் மற்றும் காய்கறிகள் போன்ற கழுவப்படாத உணவுகளை சாப்பிட்ட பின்னர் அல்லது நகங்கள் வழியாக மண் உடலுக்குள் சென்று நாடாப்புழுக்கள் உருவாகின்றன.

வயது வந்த நாடாப்புழுக்கள் மனித சிறுகுடலில் சுமார் இரண்டு ஆண்டுகள் வாழலாம். குரங்கு நாடாப்புழு இருந்தால், அதன் அறிகுறிகளில் இடைவிடாத வயிற்றுப்போக்கு, வயிற்று வலி, அடிவயிற்றின் கீழ் அரிப்பு, பதட்டம் மற்றும் எடை இழப்பு ஆகியவை ஏற்படும்.

பெரும்பாலான மக்களுக்கு பொதுவாக அறிகுறிகளைக் காட்டுவதில்லை. சதுர, செவ்வக, நீளமான வெள்ளைப் புழுப் பகுதிகள் ஒவ்வொரு இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு ஒருமுறை வெளிப்படுவதை காணலாம்.

குரங்குகள் வாழும் பகுதிகளில் வசிக்கும் மக்கள் இது குறித்து விழிப்புடன் இருக்க வேண்டும்.

ஆரோக்கியமான சுகாதார நடைமுறைகளை தொடர்ந்து கடைப்பிடிப்பதன் மூலம் குரங்கு நாடாப்புழுக்களின் பாதிப்பினை தடுக்க முடியும் என நிபுணர் துஷாரா தந்திரிகே தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
articles2F7n4ENzjaUwYHj2nMIZLh
செய்திகள்இலங்கை

நுகர்வோர் சட்டம் மீறல்: 8 வர்த்தகர்களுக்கு ரூ. 743,000 அபராதம் – குடிநீர்ப் போத்தலுக்கு அதிக விலை வைத்த வர்த்தகருக்கு 5 இலட்சம் அபராதம்!

நுகர்வோர் சேவைகள் கட்டளைச் சட்டத்தை மீறிப் பொருட்களை விற்பனை செய்த 8 வர்த்தகர்களுக்கு ரூபாய் 743,000...

1762070899 MediaFile 6
செய்திகள்இலங்கை

மெக்சிகோ சிறப்பங்காடி தீ விபத்து: 23 பேர் பரிதாப பலி; 11 பேர் காயம்!

மெக்சிகோவின் சோனோரா (Sonora) மாகாணத்தில் இயங்கி வந்த சிறப்பங்காடி (Supermarket) ஒன்றில் திடீரென ஏற்பட்ட பாரிய...

1762070899 MediaFile 6
செய்திகள்இலங்கை

நாடளாவிய போதைப்பொருள் சுற்றிவளைப்பு: 3 நாட்களில் 1,314 சந்தேக நபர்கள் கைது – ஐஸ், ஹெரோயின் மீட்பு!

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் மூலம், கடந்த மூன்று நாட்களில் 1,314...

MediaFile 4
செய்திகள்இலங்கை

யட்டியந்தோட்டை இறப்பர் தொழிற்சாலையில் கொதிகலன் வெடிப்பு: ஒருவர் பலி, 3 பேர் காயம்!

யட்டியந்தோட்டைப் பகுதியில் உள்ள கிருபொருவ தோட்டத்தில் இயங்கி வந்த இறப்பர் தொழிற்சாலை ஒன்றில் கொதிகலன் (Boiler)...