பதுளை – ஊவா பரணகம, பகுதியில் வசிக்கும் 54 வயதுடைய ஓய்வுபெற்ற இராணுவ வீரர் ஒருவர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேகநபர் தனது இரண்டு மகள்களையும் பல ஆண்டுகளாக பாலியல் அத்துமீறலுக்கு உள்ளாக்கிய குற்றச்சாட்டின் பேரில் அம்பகஸ்தோவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பாதிப்புக்குளான இருவரும் தற்போது 23 மற்றும் 29 வயதுடைய அவரது சொந்த மகள்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளார்.
தந்தை முன்னெடுத்த அத்துமீறல் செயற்பாடு தொடர்பில், இரண்டு மகள்களும் அம்பகஸ்டோவ பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியிடம் முறைப்பாடளித்துள்ளனர்.
இந்நிலையில் விசாரணைகள் தொடங்கப்பட்டு சந்தேக நபர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்தக் குற்றங்களை தனது மனைவி அல்லது குடும்பத்தினரிடம் தெரிவித்தால், சந்தேக நபர் தன்னைச் சுட்டுக் கொன்றுவிடுவதாக மிரட்டி இந்தக் குற்றத்தைச் செய்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சந்தேக நபர், சமூகத்தில் ஒரு நல்லொழுக்கமுள்ள நபராகவும் சமூக சேவகராகவும் காட்டிக் கொண்டு, வீட்டில் இந்தக் குற்றங்களைச் செய்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பந்தப்பட்ட இரண்டு இளம் பெண்களும் மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு, மேலும் அம்பகஸ்டோவா காவல்துறையினர் சம்பவம் குறித்து மேலும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.