25 683cf291ebc9e
இலங்கைசெய்திகள்

கோவிட் தொடர்பில் வெளியிடப்படவுள்ள இரண்டு சுற்று நிருபங்கள்

Share

கோவிட் தொற்று பரவுகை தொடர்பில் இரண்டு சுற்று நிருபங்கள் வெளியிடப்பட உள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

கோவிட் தொற்று பரவுகை தொடர்பில் வெளியாகி வரும் தகவல்களின் அடிப்படையில் இந்த சுற்று நிருபங்கள் வெளியிடப்பட உள்ளதாக சுகாதார அமைச்சின் செயலாளர் அணில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

பொதுமக்களுக்காக ஒரு சுற்று நிருபமும் சுகாதாரப் பணியாளர்களுக்காக மற்றுமொரு சுற்று நிருபமும் வெளியிடப்பட உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த இரண்டு சுற்று நிருபங்களை வெளியிடுவது குறித்து உரிய தரப்பினருக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

ஆசிய பிராந்திய வலய நாடுகளில் இந்தியா, தாய்லாந்து உள்ளிட்ட சில நாடுகளில் கோவிட் தொற்று பரவுகையை அவதானிக்க முடிவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதேவேளை, அண்மையில் இலங்கையில் கண்டறியப்பட்ட கோவிட் புதிய உப திரிபு தொடர்பில் மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

எவ்வாறெனினும், ஆபத்துக்களை எதிர்நோக்கக் கூடிய கர்பிணிகள், வயோதிபர்கள் மற்றும் நாட்பட்ட நோயாளிகள் முகக் கவசங்களை அணிந்து கொள்ள வேண்டுமெனவும், மக்கள் அதிகமாக நடமாடும் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
22 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ்ப்பாணத்திலிருந்து காணாமல் போன இரு மீனவர்கள் தமிழ்நாடு கடலோரப் பகுதியில் மீட்பு!

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை ஊரணி கடற்பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை மீன்பிடிக்கச் சென்ற நிலையில் காணாமல் போன இரண்டு...

21 4
செய்திகள்அரசியல்இலங்கை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு: சுரேஷ் சலே மூன்றாவது சந்தேகநபராகப் பெயரிடப்பட்டார்!

அரச புலனாய்வுச் சேவையின் (SIS) முன்னாள் பிரதானியும், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரலுமான சுரேஷ் சலே, உயிர்த்த...

20 3
செய்திகள்உலகம்

அஸர்பைஜான் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான நிலையம் மற்றும் பாடசாலை இலக்கு!

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம் அண்டை நாடுகளுக்கும் பரவி வரும் நிலையில், அஸர்பைஜானின் கட்டுப்பாட்டில்...

19 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

போலி உறுதிப்பத்திரம் தயாரித்த பெண் சட்டத்தரணிக்கு 12 ஆண்டு சிறை: கொழும்பு மேல் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

கொழும்பு பொரளைப் பகுதியில் உள்ள பெறுமதியான காணியொன்றுக்குப் போலி உறுதிப்பத்திரங்களைத் தயாரித்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட பெண்...