போலி ஆவணங்களை சமர்ப்பித்து கடவுச்சீட்டுக்களைப் பெற்றுக்கொண்ட இருவர் கைது செய்யப்பட்டுளளனர்.
குடிவரவு, குடியகல்வு திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் நாயகத்திடம் போலி ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன் காரணமாக ஆட்கடத்தல், கடத்தல் விசாரணை மற்றும் கடல்சார் குற்ற விசாரணை பிரிவினால் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மாளிகாவத்தை மற்றும் எஹலியகொட பகுதிகளை சேர்ந்த 32 மற்றும் 51 வயதுடைய இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைதான இருவரும் கொஹுவலை மற்றும் பத்தரமுல்லை ஆகிய பகுதிகளில் படப்பிடிப்பு நிலையங்களை நடத்திவருவதாகத் தெரியவந்துள்ளது.